05-19-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே!!!

வணக்கம். இனிய ஞாயிறு தின வாழ்த்துக்கள்.

ஆனந்தசந்திரிகை 05-19-2019 இதழில் …

தலையங்கம்: மெமோரியல் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் ஆசிரியர்.

வாத்தியார் ஐயா: சமுதாயத்தின் விழிகளின் மூலமாகப் பள்ளி ஆசிரியரைப் பார்க்கிறார் கவிஞர் ந. வீரா.

கம்பன் கவிநயம்: ஊடல் பற்றி வள்ளுவனின் தொடங்கி கம்பன் வரை ஆராய்கிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரின்.

அலைவன்: நவீன எண்ணுலகில் (Digital Era) ரோபோக்கள் பெருகியுள்ளன. சமைப்பதற்கு ரோபோ, வீட்டைப் பெருக்குவதற்கு ரோபோ, துணி துவைத்துக் காயப் போடுவதற்கு ரோபோ, பலகுரலில் பாட்டுப்பாடும் ரோபோ, நடனம் ஆடும் ரோபோ, படுக்கையைப் பகிர்ந்து கொள்ள ரோபோ என்று பலவிதமான வேலைக்கான ரோபோக்கள் வந்து விட்டன.” என்று நவீன உலகிற்கு எடுத்துச் செல்லுகிறார் கதையினை இராம்கி.

நாளொன்று போதாதே!: அன்னையின் பெருமையைப் பேசிட ஒரு நாள் போதாதே என்று அன்னையர் தினக்கவிதையில் கேயென்னார்.

பயன் தரும் பனை: கவிதை மூலம் பனை மரத்தின் பயன் விளக்குகிறார் கவிதா அ. கோ.

ஈராக் போர்முனையில்: “அவசர அழைப்பிற்குப் பின் பத்து நிமிடத்திற்குள் வாகனங்கள் இங்கிருந்து புறப்பட்டு அனைவரும் முகாமை காலி செய்தாகவேண்டும். அதற்குள்ளாக அனைவரும் வாகனங்களில், தங்களின் பைகளுடன் அமர்ந்திருக்க வேண்டியது கட்டாயம். அழைப்புமணி எப்போது வேண்டுமென்றாலும் ஒலிக்கலாம். அனைவரும் எப்போதும் தயார்நிலையில் இருங்கள். யாருக்காகவும் காத்திருக்க மாட்டோம்! மணியடித்த பத்து நிமிடத்திற்குள் வாகனங்கள் முகாமை விட்டு வெளியேறிவிடும்!” என்று போர்க்கால அணுகுமுறையை விளக்குகிறார் ஆசிரியர் ஷாகுல்.

உதவி: “சுதா அந்த சிறுவனின் நேர்மையை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போனார். அந்த சிறுவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வீட்டில் ஆட்களும் அதிகம். அவனுக்கே ஆசைப்படும் வயது. ஆனாலும் அந்த ரூபாயை வேறு வகையில் செலவு செய்து விடாமல் திருப்பி அனுப்பிய அந்த உயர்ந்த பண்பை எண்ணி அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை” என்று உதவி செய்யும் முன் பாத்திரம் அறிய வேண்டும் என்கிறார் கதாசிரியர்

கேயென்னார்.

திரை விமர்சனம்-To Let: “அவ்வப்போது அவ்வீட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் ஒரு குருவி ஒருநாள் மின்விசிறியில் அடிபட்டுச் செத்துப்போவதைப்போல அவர்களின் எளிய வாழ்விலான கனவுகளனைத்தும் சொந்தமாக வீடும் பொருத்தமான வாடகைவீடும் இல்லையென்னும் காரணத்தினால் அடிபட்டுப்போகின்றது.” என்று டு லெட் திரைப்படத்தின் இயக்குநரைச் பாராட்டுகிறார் திருமதி. லோகமாதேவி.

மக்களால், மக்களுக்காக: சென்னை போன்ற நகரங்களில் பல அடுக்கு கட்டடங்களில் வசிப்பவர்கள் பல மாநிலங்களைச் சேர்ந்த பல மொழி பேசுபவர்கள். அவர்கள் கட்டடம் சார்ந்த கூட்டங்களில் அதிகமாக ஆங்கிலத்திலேயே பேசி வருகிறார்கள். இந்தியாவில் பிறந்த இந்தியக் குடிமகன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாழும் உரிமையும் வேலை பார்க்கும் உரிமையும் கொண்டவர்கள் என்பதை நாம் மறக்கலாகாது என்று மனித உரிமையை எடுத்துரைக்கிறார்” ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.

மழலை மழைத்துளிகள்: ஓவியத்தில் வண்ணம், வானவில்லில் வண்ணங்களை வரிசைப் படுத்தி விட்டு, வீட்டு விலங்குகளின் ஒலியால் உள்ளத்தை மகிழ்விக்கிறார் மழலைக் கவிதைகளின் மணிமீ.

பச்சை நிறமே…: “பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக் காண உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்.” என்று நம்மை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லுகிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I accept that my given data and my IP address is sent to a server in the USA only for the purpose of spam prevention through the Akismet program.More information on Akismet and GDPR.