02-15-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்கள் அனைவருக்கும் “காதலர் தின வாழ்த்துக்கள்”. ஆனந்தசந்திரிகை 02-15-2019 இதழில் …

  • தலையங்கம்: அடுத்த இதழிலில் இருந்து ஆனந்தசந்திரிகை வெளியிடும் தேதியில் ஒரு சிறு மாற்றம் செய்ய இருக்கிறோம். அதாவது மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையன்றும், மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையன்றும் வெளியிட்டால் படிப்பவர்களுக்கு வார விடுமுறையில் படிக்க வசதியாக இருக்கும். எனவே அடுத்த இதழ் பிப்ரவரி 28-ம் தேதி வெளிவருவதற்குப் பதிலாக மார்ச்சு மாதம் 3-ம் தேதி வெளிவரும்.
  • உன் நலமன்றோ: கவிஞர்களுக்கு காதல் கவிதை எழுவது மிகப் பிடித்தமான செயல். இராம்கியும் அதற்கு விதிவிலக்கல்ல.
  • வாழும் கலை: நாம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் பலர் நம்முடைய கருத்துடன் ஒத்துப்போவதில்லை. கருத்து வேறுபாடுகளைக் கையாளுவது எப்படி? என்பதைக் கதை மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • வள்ளலார் குஞ்சு: மூலைக்கும், இதயத்திற்கும் ஏற்படும் முரண், அறிவிற்கும் உணர்விற்கும் ஏற்படும் முரண். முடிவில் இதயமே வெல்லும் என்பதைக் கவிதை பாடி உரைக்கிறார் நா.வீரா.
  • தூக்குத்தூக்கி: வாழ்வின் பாரம்தனை வார்த்தையால் விளக்குவது கவிஞருக்கே சாத்தியம். கவிதாவின் கவிதை கலங்க வைக்கும் உண்மை.
  • ஈராக் போர்முனையில்: “எதிர்பாராமல் முகத்தில் பலத்த அடி விழுந்ததில் நிலை தடுமாறிக் கீழே விழுந்த ஜோக்கிம், வாயிலும், மூக்கிலும் ரத்தம் சொட்டச்சொட்ட அடுமனையை நோக்கி ஓடி வந்தான். அவன் எதுவும் பேசவில்லை. சைகையால் கையசைத்தான். தூரத்தில் வைன் நின்று கொண்டிருந்தான். ஜோக்கிமிடம் யாரும் எதையும் கேட்கவில்லை. வைனின் அட்டுழியங்கள் அனைவரும் அறிந்ததே. அடுமனையிலிருந்தும், வெளியிலிருந்தும் வேலை செய்துகொண்டிருந்த பெருங்கூட்டம் ஒன்று வேகமாக ஓடியது வைனை நோக்கி” என்று உச்சக்கட்டத்தில் கதையை நிறுத்தியுள்ளார் ஆசிரியர் ஷாகுல்.
  • கொத்தடிமை: அடைக்கலத்துக்கு அவன் அடிமையாயிருப்பதும் புரிந்ததில்லை; சுதந்திரமாயிருக்க வேண்டும் என்பதும் தோன்றியதில்லை. சொல்லப் போனால் சுதந்திரமாயிருப்பது என்றால் என்னவென்றே அவனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியாது. அதை எல்லாம் தெரிந்து கொள்கிற அளவுக்கு அகர்வால் அவர்களை அனுமதித்ததே இல்லை” என்று சமுதாய அவலத்தைப் பறை சாற்றுகிறார் ஆசிரியர் கேயென்னார்.
  • காற்று விடு தூது: கேயென்னாரின் காதலர் தினக் கவிதை காற்றிடம் தூது விடும் அழகு.
  • திரை விமர்சனம்: “காதலி பயணிக்கும் பேருந்து ஸ்டுடியோவை கடக்கையிலெல்லாம் ஃபகத்தின் உடல்மொழியும் நாயகியின் நடிப்பும் பிரமாதம், ஜிம்சனின் தங்கையே காதலி ஜிம்சி என்பது நாயகனின் சபதத்தை ஒன்றும் சிதைப்பதில்லை. முன்காதலியின் திருமணத்தன்று அவளைத் தெருவிலிருந்தபடி பார்த்து ஃபகத் புன்னகைக்கும் காட்சியை திரைப்படக்கல்லூரியில் பாடமாக வைக்கலாம்.” என்று நடிப்பு மொழிக்கு அப்பாற்பட்டது என்று முழங்குகிறார் திருமதி. லோகமாதேவி.
  • மக்களால், மக்களுக்காக: வலது கை புழுதி பெரிசா? இடதுகை மண்ணாங்கட்டி பெரிசா என்ற நிலையில் உள்ளது இந்தியாவின் அரசியல் என்று ஆதங்கப்படுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுக்காக எழுதப் பட்டாலும் ஆசை எண்ணம் முயற்சி வெற்றி அனவருக்குமான கவிதை என்கிறார் மழலைக் கவிதைகளின் மணிமீ.
  • பச்சை நிறமே…: “பூக்களே காய் போல சதைப்பற்றுடன் இருப்பதால் அத்தி பூப்பதில்லை நேரடியாக காய்த்து விடுகின்றது என்னும் நம்பிகையின் பேரில் “அத்தி பூத்தாற்போன்று” எனும் ஒரு பழஞ்சொல்கூட வழக்கத்தில் இருக்கின்றது.” என்ற பழமொழிக்கு அறிவியல் விளக்கம் அளிக்கிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I accept that my given data and my IP address is sent to a server in the USA only for the purpose of spam prevention through the Akismet program.More information on Akismet and GDPR.