அன்பு வாசகர்களே !!!
வணக்கம். அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள். ஆனந்தசந்திரிகை 01-15-2019 இதழில் …
- தலையங்கம்: வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் கூறும் ஆசிரியர் குழு, உழவர் திருநாளில் உழவனின் உயர்வுக்கு பாடுபடுவோம் என்று அறிவுறுத்துகிறார்.
- பொங்கல் தினம் பிறந்ததம்மா: பொங்கல் வாழ்த்துக் கவிதை – கேயென்னாரும், இராம்கியும் கலந்தாலோசித்து எழுதிய கூட்டு முயற்சிக்கவிதை.
- வாழும் கலை: “என் வாழ்க்கைக்கு ஒரு புது லட்சியம் கிடைச்சிருக்கு. இதை இழக்க எனக்கு மனசில்லை. தவிர, நிறைய மொட்டுகள் கருகாமல் இருக்க, வாடிப்போன பூவிலேர்ந்து ஒரு இதழ் விழுந்தா என்ன? விழட்டுமே!” என்று ஒரு புதிய பாதையைக் காட்டுகிறார்” ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
- ப்ரிடிஷ் நூலகம்: தான் சென்ற ப்ரிடிஷ் நூலகத்தை பற்றி எழுதும் ஆசிரியர் இராமசேஷன், நமது நாட்டில் உள்ள எழுத்தாளர்களின் நிலமையை எண்ணி ஆதங்கப் படுகிறார்.
- ஈராக் போர்முனையில்: “டிசம்பர் மாதத்தில் திக்ரித்தில் முதல் முதலாக குண்டு வெடித்தது. அனைவரும் ஓடி பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் பதுங்கினோம். அதன் அருகில் இருந்த கழிப்பறைக்குள் கோவாவின் பெர்னாண்டோ மாட்டிக் கொண்டான். கழிப்பறை நெகிழியால் செய்யப்பட்டது. குண்டு விழுந்ததும் தெறித்த சிறு கற்கள் கழிப்பறையை துளைத்து கொண்டு அவனது கால்களை பதம்பார்த்தது.” என்று திக்-திக் இதயம் துடிக்கும் வகையில் கட்டுரையைத் தொடர்கிறார் ஆசிரியர் ஷாகுல்.
- இணையில்லா தோழிக்கு: தமிழ்ப்பணிக்கு விருது பெற்ற ஆசிரியர் முனைவர். திருமதி. லோகமாதேவிக்கு ஆனந்தசந்திரிகையின் அன்புகலந்த வாழ்த்துக்கள்.
- சிவா ஒரு புதிய மனிதன்: “வெளி உலகத்திற்கு சிவராமகிருஷ்ணன் மிகவும் அபிமானமுள்ளவராக இருந்தாலும், வீட்டில் குழந்தைகளிடமும் மனைவியிடமும் பொறுமையில்லாதவராக இருந்தார். எப்பொழுதும் எதையோ நினைத்துக் கொண்டும், தன்னை விட பெரிதாக வளர்த்தவர்களை கண்டு பொறாமை கொண்டும் வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தார்” என்று மனித மனத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார் இக்கதையில் கேயென்னார்.
- மலருக்கு மனம் இருந்தால்: மலருக்கு மணம் உண்டு என்று அனைவரும் அறிவோம். ஆனால் இக்கவிதையில் மலருக்கு மனம் உண்டு, அதில் எண்ணங்கள் உண்டு என்று மலரின் எண்ண ஓட்டத்தை கவிதையாய் வடிக்கிறார் கேயென்னார்.
- திரை விமர்சனம்: இந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான ஆனந்தவிகடன் விருதை பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படத்தை “சேற்று மண் இறுகிகெட்டிப்பட்டதைபோல அதிகம் பச்சையில்லாத ஒரு கதைக்களம். பல சமயங்களில் காமிரா பெரும்பாலும் செந்நிறப்பரப்பும் இடையிடையே பச்சை சதுரங்களாக வயல்களுமாய் உயரத்திலிருந்து அந்த கிராமத்தை கவிதையாகக் காண்பிக்கிறது.” என்று தன் அழகான வரிகளால் விமர்சிக்கிறார் திருமதி. லோகமாதேவி.
- மக்களால், மக்களுக்காக: “பிரதமர் மோடி சமீபத்தில் கொண்டு வந்த இடஒதுக்கீடு பற்றிய அரசியல் சட்ட அமைப்பு சீர்திருத்தம் மிகவும் வரவேற்கத்தக்கது. ஜாதி அடிப்படையில் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியாக கல்வி நிறுவனங்களிலும், அரசாங்க வேலை வாய்ப்புக்களிலும் 10 சதவீதம் இடங்கள் வருமானம் குறைந்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும்” என்பதை மனம் திறந்து பாராட்டுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- தமிழ் நண்பர்கள் – பொங்கல் விழா: டல்லஸ் மாநகரில் நடந்த 4000+ தமிழர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அளவிலான பொங்கல் விழாவினை விளக்குகிறார் ஆசிரியர் சசிகலா.
- மழலை மழைத்துளிகள்: தை தை என்று தாளமிட்டு வரும் மழலை கவிதையில் பொங்கலின் சிறப்பை குழந்தைகளுக்கு விளக்குகிறார் கவிஞர் மணிமீ. திருவள்ளுவர் தினத்திற்கும் ஒரு மழலைக் கவிதை உண்டு படித்துக் கொண்டாடுங்கள்.
- பச்சை நிறமே…: உயிர்சிற்பக்கலை எவ்வாறு எந்த வித தாவரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது போன்ற உயிரியல் தகவல்களைத் தருகிறார் திருமதி. லோகமாதேவி.
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.
Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.