அன்பு வாசகர்களே !!!
வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆனந்தசந்திரிகை 12-31-2018 இதழில் …
- தலையங்கம்: வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் ஆசிரியர் குழு, “இந்த வருடம் உங்கள் செயல் திட்டப்பட்டியலில், குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் சேர்ந்துக் கொள்ளுங்கள். உங்கள் தீர்மானம் நிறைவேற எங்களால் உதவமுடியுமானால் தயங்காமல் கேளுங்கள்” என்ற விண்ணப்பத்தையும் சேர்த்துள்ளார்.
- தமிழினத்தின் அடையாளம்: கவிஞர் ந. வீரா தமிழினத்தின் அடையாளமாக யாரைச் சொல்லுகிறார்? சூரியனுக்கு வானம்சலித்தபோதெல்லாம் எவருடைய வார்த்தைகளுக்குள் வந்து போவான்? படிக்க வேண்டிய பரவசப்படுத்தும் கவிதை.
- வாழும் கலை: பகவத்கீதையில சொன்ன பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் முதல் பதஞ்சலியின் எட்டு யோகநிலையைப் பேசி, சரவணனுக்குக் கிடைத்த சினிமாயோகம் வரை அழகாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர். உங்களுக்கு எந்த யோகம் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
- இராமானுஜம்: கணித மேதையின் தேற்றம் மட்டும் படித்தால் போதாது அவருடைய தோற்றத்தையும் கொண்டாடுவோம் என்கிறார் கவிஞர் ந. வீரா.
- பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்: பழையசோறு போட்ட பாட்டிக்கு ஒரு ஊரையே எழுதிக் கொடுத்த மன்னர் கதை தெரியுமா? செவி வழிக் கதையினைப் பகிர்கிறார் ஆசிரியர் இராமசேஷன்.
- ஈராக் போர்முனையில்: “மறுநாள் முதல் உடுக்க ஆடை இல்லை. பொருத்தமே இல்லாத அளவில் ஒரு காற்சட்டையும், பனியனும் தந்தார்கள். கயிறால் அந்த காற்சட்டைக்கு மேல் கட்டிய பிறகுதான் அது இடுப்பில் நின்றது” என்று இடுப்பில் நிற்காத காற்சட்டையும், இதயத்தைவிட்டு அகலாத தீ விபத்தையும் விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர் ஷாகுல்.
- குழந்தையின் கனவு: மிதுன் அம்மாவிடம் கதை கேட்டவாறே கண்களை மூடிட, அவன் கனவும் மெதுவாக விரிந்தது. அதே அவரை செடியும் காயும் கண்ணில் தெரிந்தது, அவரைக்காயைப் பறித்தவுடன் அது அம்மா வடிவில் தேவதையானது. அவன் அம்மாவை கண்டதும் ஓடிச்சென்று கட்டிப்பிடிக்க அவள் அவனுக்கும் முத்தம் கொடுக்க அந்த இடங்களில் எல்லாம் பொன்மயமானது” என்று குழந்தைகளின் கண்கள் வாயிலாகக் கனவு காண்கிறார் கேயென்னார்.
- மரியா ஈன்ற மகவு: துயரம் தொலைந்திட தூயவன் பிறந்த கதையைக் கவிதையாய் வடிக்கிறார் கேயென்னார்.
- திரை விமர்சனம்: “Mountain between us” என்று இவர்களிருவரும் சிக்கிக்கொண்டிருக்கும், முடிவற்றதுபோல தோற்றமளிக்கும் பனிமலையையல்ல இக்கதையும் அதன் தலைப்பும் பேசுவது, உயிர்வாழவேண்டும் என்னும் ஆதார இச்சையும், அவரவர் வாழ்வு குறித்தான விழைவுகளும் அச்சங்களும் கவலைகளும் திட்டங்களுமாக இவர்கள் இருவருக்கும் இடையில் உருவாகியிருந்த மாபெரும் பனிமலையொன்றினைக்குறித்தும் அது மிக மெல்ல அவர்களுக்குள் உருவாகும் காதலின் வெம்மையில் கரைவதையுமே இத்திரைப்படம் பேசுகின்றது” என்று படிப்போரை பார்க்கத் தோன்றும் வகையில் விமர்சிக்கிறார் திருமதி. லோகமாதேவி.
- மக்களால், மக்களுக்காக: “காக்கை குருவிகளைப் பார்த்து வளர்ந்த காலம் முடிந்து, வண்ண வண்ண டிரோன்கள் பறப்பதைப் பார்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. உலகின் ஒவ்வொரு மூலையும் கண்காணிக்கும் தொழில் நுட்பமும் தொலைவில் இல்லை” என்று தொல்லைதரும் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத் தீர்வு காண்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுக்கான புத்தாண்டுக் கவிதை, தங்கநிலா, காற்றின் திசை என்று குழந்தைகளைக் குஷிப்படுத்துகிறார் மழலை கவிதைகளில் கவிஞர் மணிமீ.
- பச்சை நிறமே…: ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இளவரசி விக்டோரியா, இந்தியா வந்திருந்த போது ஹூக்ளி நதியானது இங்கிலாந்தின் உள்ள தேம்ஸ் நதியைப்போல் காட்சியளிக்க வேண்டுமென்பதற்காக கொல்கத்தாவிற்கு வருகை தரும்போது இதை கொண்டுவந்து ஹூக்ளியில் விட்டதாகக் கூறப்படுகிறது என்று ஆகாயத்தாமரை பற்றிய ஆச்சரியமான தகவல்களைத் தருகிறார் திருமதி. லோகமாதேவி.
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.
Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.