அன்பு வாசகர்களே !!!
வணக்கம். ஆனந்தசந்திரிகை 12-15-2018 இதழில் …
- தலையங்கம்: பரிசு என்பது அன்பின் வெளிப்பாடு. நான் உன்னைப் பற்றி யோசித்து உன் தேவையை அறிந்து, உனக்கு என்ன பிடிக்கும் என்று தேர்ந்தெடுத்து வாங்கி வந்துள்ளேன் என்று சொல்லுவது. ஆனந்தசந்திரிகையும் கிறிஸ்துமஸ் தினத்தில் வாசகர்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப் போகிறது. அது என்னவென்று விளக்கியுள்ளார் ஆசிரியர். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
- அர்த்தம் கூடியிருந்தது: ஒருவருடன் அன்பை பகிரும் போது, அதன் வெளிப்பாடாய் அவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுக்கும் போது நம்மிடம் எதுவும் குறைவதில்லை. ஆனால் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் கூடுகிறது என்பதை கவிதையின் மூலமாகப் பாடியுளார் கவிஞர் ந. வீரா.
- வாழும் கலை: பேரம் பேசுவது “சரியா? தவறா?” என்பது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள். உங்கள் பதில் எதுவாக இருந்தாலும், ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரின் இக்கதையைப் படித்த பிறகு அது மாறும். கதையைப் படித்து பின் உங்கள் விடையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
- மகாகவி பாரதி: மகாகவி பாரதிக்கு பிறந்தநாள் கவிதாஞ்சலி. பாரதி கண்ட கனவில் நிகழ்ந்தது எது? இன்னும் நிகழாதது எது? என்று தரம் பிரித்து ரெளத்திரம் கொள்கிறார் ஆசிரியர்.
- ம.ப.பெரியசாமி தூரன்: “தொண்டில் கனிந்த தூரன்” எனும் நூல் சிற்பி பாலசுப்பிரமணியம் என்பவரால் தொகுக்கப்பட்டு “பாரதீய வித்யா பவன்” கேந்திரா வெளியீடாக வெளிவந்துள்ளது. இவர் மாற்றுக் கட்சிக்காரர், திராவிட சிந்தனை இல்லாதவர் என்பதாலோ என்னவோ தமிழகத் “தமிழ் விரும்பி அரசின்” பார்வை இவர்மீது படவில்லை!” என்று ஆச்சரியப்படுகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
- ஐய்யனைக் காண்போம்: கார்த்திகை-மார்கழி மாதத்தில் மாலை போட்டு மலையேறும் ஐய்யப்ப பக்தர்களுக்காக கவிதை பாடிச் சரணம் சொல்லுகிறார் கேயென்னர்.
- ஈராக் போர்முனையில்: கண்முன்னே, என்னுடைய அனைத்து பள்ளி, ஐடிஐ, தொழில் பழகுநர் சான்றிதழ்கள், முன்பு வேலைபார்த்த நிறுவனங்களின் அனுபவ கடிதங்கள், இன்னும் சிலநினைவுபொருட்கள், அக்காவின் திருமணத்தின்போது மச்சான் பரிசளித்த மோதிரம், கடவுச்சீட்டு, கப்பல் வேலைக்கான சி டி சி மற்றும் அதற்குத் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் சில நிமிடங்களில் சாம்பலாகிவிட்டது. அடுத்து என்ன? என்ற கேள்வியை அனைவருக்கும் விட்டுச் செல்லுகிறார் ஷாகுல்.
- அவள் அப்படித்தான்: “அப்படியே தலையில் இடி இறங்கியதுப் போல் இருந்தது முத்துலெட்சுமிக்கும், பழனிக்கும். அந்த ஒருநொடியில் அவர்களது எண்ணங்கள் அலைப்பாயத் தொடங்கியது. தன் மகளுக்கு என்ன நடந்ததோ? எங்கு இருக்கிறாளோ என்று. அப்பொழுது அங்கு ஒரு கார் வந்து நின்றது.” நடந்தது என்னவென்று அறிய படியுங்கள் கேயென்னாரின் இக்கதையினை.
- திரைவிமரிசனம்:2.0: திருமதி. லோகமாதேவி எழுதும் புதிய பகுதி “மாயசந்திரிகையில்” திரைவிமரிசனம், அதுவும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி பட விமரிசனத்துடன் விமரிசையாகத் தொடங்குகிறது.
- மக்களால், மக்களுக்காக: “இவர் தனது கடைசி 10 ஆண்டுகளாக அணியும் காலுறை மக்களின் கவனத்தைப் பெற்றது. அவருடைய இறுதி ஊர்வலத்தில் அவர் அணிந்திருந்த காலுறை கப்பற்படைக்கு மரியாதை செய்வதாக அமைத்திருந்தார்கள்?” என்று காலம் சென்ற ஜார்ஜ் ஹெச். டபிள்யு. புஷ் அவர்களின் காலுறை சொன்ன கதைகளைத் தொகுக்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- மழலை மழைத்துளிகள்: கிறிஸ்துமஸ், சாண்டா, ரயில் வண்டி என குழந்தைகளுக்குப் பிடித்த அனைத்தையுமே மழலை கவிதைகளில் பரிசாய்த் தருகிறார் கவிஞர் மணீமி.
- பச்சை நிறமே…: நாம் அனவருமே காப்பியில் சிக்கரி கலந்து குடித்துள்ளோம். சிக்கரி உடல் சூட்டைத் தணித்து மூச்சுத் திணறல், அஜீரணம், தலைவலி ஆகியவற்றை நீக்குகிறது. மூளையை சுறுசுறுப்பாக்கும் மருந்தாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் சிக்கரி பயன்படுகின்றது. சிக்கரி என்பது விதையா, வேரா? இலையா? அல்லது காயா? தெளிவாக விளக்குகிறார் திருமதி. லோகமாதேவி.
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.
Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.