அன்பு வாசகர்களே !!!
வணக்கம். ஆனந்தசந்திரிகை 11-30-2018 இதழில் …
- தலையங்கம்: இது ஒரு மகிழ்ச்சியும் துயரமும் கலந்த ஒரு தலையங்கம். மகிழ்ச்சியும் இரட்டிப்பாகியுள்ளது, துயரமும் இரட்டிப்பாகியுள்ளது. இத்தகையத் தருணங்களில் நமது கடமையை நினைவுப்படுத்துகிறார் ஆசிரியர்.
- கஜாவின் கதை: நமது அரசியல்வாதிகளின் செயல்பாட்டைக் கஜாவின் கதை என்ற கவிதையின் மூலமாகத் சாடியுளார் கவிஞர் ந. வீரா.
- வாழும் கலை: நாம் எல்லோரும் கற்க வேண்டிய கலைகளில் ஒன்று கற்பனையாக மற்றவர் உள்ளத்தில் புகுந்து அவர் உள்ளக் கிளர்ச்சியை அறிதல், ஆங்கிலத்தில் சொன்னால் “To put yourself in their shoes” அதன் அவசியத்தை இக்கதையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
- தொடாமல் மலர்ந்த கவிதை: காதலும் கவிதையும் பிரிக்க முடியாத ஒன்று. உடனிருந்தாலும் விலகிச் சென்றாலும் நிறம் மாறித் தொடர்ந்து வரும் என்கிறார் கவிஞர் ந. வீரா.
- பிராமணத் தமிழ்: பிராமணத் வட்டாரத் தமிழின் செழுமையை விளக்குகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
- ஈராக் போர்முனையில்: போர்முனையில் ஏற்படும் அமைதி நிலைக்குமா? இருந்தாலும் அங்கே அமைதியான வாழ்க்கையிருந்தது என்பதை அழகாக விளக்கிப் படிப்போரை ஆசுவாசப்படுத்துகிறார் ஷாகுல்.
- நன்றி நவில்தல் ஒரு சுவையே: காலம் பல மாற்றங்களைக் கொண்டுவந்தாலும் “மனிதனின் நன்றி மறவா செயல்” நாளும் பாராட்டப்பட வேண்டியது என்பதை கவிதை பாடிச் சொல்லுகிறார் கேயென்னர்.
- பறந்து வா பாட்டி: பாசமிகு அழைப்பிற்கு பறந்து செல்லுவாள் பாட்டி, என்பதை முதன் முறையாக ஆகாயமார்க்கமாகப் பறந்து செல்லும் பாட்டியின் கதையில் காட்டுகிறார் கேயென்னார்.
- மக்களால், மக்களுக்காக: “ரோம் நகரம் தீப்பற்றி எறியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். இந்தக் கதையைப் படித்தவர்கள் இப்படி ஒரு மன்னன் இருந்தானா? மக்கள் துயரப்படும் போது அவர்களுக்கு உதவ வேண்டிய செயல்களைச் செய்யாமல் மொட்டை மாடியில் நின்று கொண்டு ஒரு மன்னனால் எவ்வாறு பிடில் வாசித்து மகிழ முடிந்தது?” என்ற கேள்விக்கு நிகழ்கால உதாரணம் தருகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுக்குப் பிடித்த தோசை, நாய்குட்டி, நன்றி நவிதல் நாள் விருந்து அனைத்தையுமே மழலை கவிதையாய்த் தருகிறார் கவிஞர் மணீமி.
- பச்சை நிறமே…: அல்லியின் அகன்ற இலை 30 கிலோ வரை எடையைத் தாங்குமாம். ஆச்சரியத்தை அள்ளித் தெளிக்கிறார் இந்த இதழில் திருமதி. லோகமாதேவி.
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.
Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.