அன்பு வாசகர்களே !!!
வணக்கம். ஆனந்தசந்திரிகை 11-15-2018 இதழில் …
- தலையங்கம்: உலகமெல்லாம் வாழும் குழந்தைகளுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் கூறி உலகநாடுகளும், அமெரிக்க தமிழ்ச் சங்கங்களும் குழந்தைகள் தினத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆராய்கிறார் ஆசிரியர்.
- குழந்தைகள் தினம்: குழந்தைகள் என்றாலே சந்தோஷம், குழந்தைகளை வாழ்த்திக் கவிதை எழுவது என்றால் இரட்டிப்பு சந்தோஷம். குழந்தைகள் தின வாழ்த்துக் கவிதையைத் தருகிறார் இராம்கி.
- வாழும் கலை: பாலியியல் கல்வி அவசியமானது. இந்தியாவில் உள்ள 20 கோடி இளைய தலைமுறையினருக்கு இந்தக் கல்வி இன்றும் கிடைப்பதில்லை. அதன் விளைவுகளைக் கதையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
- முத்துசாமி ஐயர்: இந்தியர் எவருக்கும் கிடைக்காத உயர்பதவியான சென்னை ஹைக்கோர்ட் தலைமை ஜட்ஜ் பதவி பெற்ற முத்துசாமி ஐயரைப் பற்றிய சுவையான தகவல்களைப் பகிர்கிறார் ஆசிரியர் இராமசேஷன்.
- ஈராக் போர்முனையில்: “டைகிரிஸ் ஆற்றை அரண்மனைக்குள் வரும்படி பாதை அமைத்து செயற்கையாக நீர்விழ்ச்சி அமைத்திருந்தனர். நீர்வீழ்ச்சி கீழே விழும் இடத்தில் பெரிய நீச்சல்குளமும், குளியலறை, நவீன சமையலறை போன்ற அனைத்து வசதிகளும் அருகில் இருந்தன. சர்வாதிகார மன்னன் சதாமின் ஆடம்பரம் அங்கு தெரிந்தது” என்று சதாமின் வாழ்க்கை முறையை வர்ணிக்கிறார் ஷாகுல்.
- விடை பெற்ற கனவு: “பாழாய்ப் போவதற்கா, காலத்தை விரயமாக்கி பட்டப் படிப்பை பூர்த்தி செய்தோம்?இக்கட்டான சூழலில் இரண்டு தோள்கள் ஆதரவாய் சேர்ந்தால், குடும்பப் பாரம் சுமக்கும் நிரஞ்சனுக்கு எத்தனை ஆதரவாய் இருக்கும்?” என்று எண்ணும் மனைவியின் எண்ணம் நிறைவேறியதா? என்று படித்தறியுங்கள் கேயென்னரின் இந்தக் கதையினை.
- மக்களால், மக்களுக்காக: “நமது சமுதாயத்தில் திருமணம் என்பது சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட, அங்கீகரிக்கப்பட்டச் சடங்கு. அது காதலைத் தவிர பலவேறு காரணங்களால் நிகழ்த்தப்படுவது. காதல் இல்லையேல் சாதல் என்ற பாரதியின் வரிகளை நினைவு படுத்துகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- மழலை மழைத்துளிகள்: சிறு கவிதைகளால் படிப்பவர்களைக் சிறு குழந்தைகளாக்கிப் பார்க்கும் வல்லமையுள்ள திரு. மணீமி கவிதைகள் இந்த இதழுக்குச் சிறப்பு.
- பச்சை நிறமே…: ஆர்கிட் பூக்கள் ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் இருக்கிறதாம். நமது இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் பெயரில் கூட ஒரு மலர் இருக்கிறதாம். மலர்களை அள்ளித் தெளித்து அசத்துகிறார் திருமதி. லோகமாதேவி.
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.
Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.