அன்பு வாசகர்களே !!!
வணக்கம். ஆனந்தசந்திரிகை 10-31-2018 இதழில் …
- தலையங்கம்: இனிய தீபாவளித் திருநாளுக்கு நல்வாழ்த்துக்கள் கூறி, பாதுகாப்பான, சூழ்நிலையை அசுத்தப்படுத்தாத வகையில் தீபாவளியை கொண்டாட அறிவுறுத்தியுள்ளார் ஆசிரியர்.
- தீபாவளி வாழ்த்துக் கவிதை: தீபாவளி வாழ்த்துக் கவிதையைத் தருகிறார் இராம்கி.
- வாழும் கலை: அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை. மதமும் ஜாதியும் என் செய்யும் என்பதனை நட்பின் அன்பால் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
- திருமங்கைஆழ்வார்: அவரை மணக்க குமுதவல்லி நிபந்தனை ஒன்று விதித்தார். ‘நீர் எக்குலத்தாராய் இருப்பினும் வைணவராயின் என்னை மணக்கலாம் என்றார். அதனை ஏற்று நீலன் திருநிறையூர் நம்பி அவர்களிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு திருமண்காப்புடம் குமுதவல்லி நாச்சியார் முன் நின்றார். ஏன் என்று அறிய படியுங்கள் ஆசிரியர் இராமசேஷனின் கட்டுரையை.
- ஈராக் போர்முனையில்: “மும்பையின் வாழ்க்கை நினைவுக்கு வந்தது. ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையுடைய மாடி அறை. கோடையில் பகலில் அறையில் இருக்கவே முடியாது. அனல் போல் கொதிக்கும் வெப்பம். அறையிலிருந்து மாஹிம் ரயில் நிலையம் போகும் வழியில் நடைபாதையில் இருக்கும் மரத்துக்குக் கீழ் உள்ள சுவரில் தான் பெரும்பான்மையான நாட்களை கழித்திருப்பேன். பட்டினியாக வேலை தேடிய நாட்களே அதிகம். எனவே மும்பை திரும்பி போவதில்லை என்பதில் உறுதியானேன் என்று துணிந்த ஷாகுல் எங்கே போனார் என்று படித்தறியுங்கள்.
- உன் நினைவாய்: “முகத்தைத் துடைத்து விட்டு பக்கத்திலிருந்த சின்னப் பெட்டிக்குள் இருந்த குங்குமத்தை எடுத்தாள். “இப்ப வைக்காதே உடனே அழிஞ்சு போயிடும்” அஜித் சொன்னதை பொருட்படுத்தாமல் பொட்டு வைத்து விட்டு சாய்ந்து கொண்டு “பசிக்குது அஜித்”. அவன் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.” அவள் குங்குமம் நிலைத்ததா என்று படித்தறியுங்கள் கேயென்னரின் இந்தக் கதையினை.
- மக்களால், மக்களுக்காக: “கடந்த காலத்தைக் கண்ணாடியில் மட்டும் பார்த்துக் கொண்டு எதிர்காலத்தை நோக்கிக் கார் ஓட்ட முடியாது. அவ்வப்போது கண்ணாடியைப் தற்காப்புக்காகப் பார்க்கலாம், நாம் போக வேண்டிய பாதை முன்னால் உள்ளது என்பதை நினைவில் கொள்வோமாக” என்று நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவு குரல் கொடுக்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுடன் பாடிப் பழக தீபாவளி பற்றிய வண்ணக் கவிதைகளை வாரி வழங்கியுள்ளார் திரு. மணீமி. தீபாவளிக்கு கிடைத்த இனிப்பு.
- பச்சை நிறமே…: நிறம் மாறும் மனிதர்கள் உண்டு, விலங்குகளும் உண்டு. பூக்களும் உண்டா? வியப்பில் ஆழ்த்துகிறார். – திருமதி. லோகமாதேவியின் புதிய தொடர்.
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.
Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.