06-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம்.

ஆனந்தசந்திரிகை 06-15-2018 இதழில் …

 

தலையங்கம்: வடகொரியாவின் அணு ஆயுதத்தைவிட மக்களை அதிகம் அச்சுறுத்துவது எது என்பதை விளக்குகிறார் ஆசிரியர்.

இயற்கையே கடவுள்: பஞ்சபூதங்களால் நிரம்பிய உலகை, மதமும், மதம் சார்ந்த நம்பிக்கைகளும் சூழ்ந்து வருகிறது. அவைகளால் உருவாக்கப்பட்ட “மாயமான்” தோற்றத்தைப் புரிந்து கொண்டு, நாம் போற்றவேண்டியதும், துதிக்க வேண்டியதும் இயற்கையே என்பதைக் கவிதை பாடி விளக்குகிறார் ஸ்ரீ ஸ்ரீதர்.

தந்தையர் தின வாழ்த்துகள்: தந்தையின் கண்களின் நீரில் அன்பு வெளிப்படும், ஆனால் அதற்கு அளவுகோல் இல்லை என கவிதைபாடி, தந்தையின் உயர்ந்த உள்ளத்தை வாழ்த்துகிறார் கேயென்னார்.

விரல்விடு தூது: முனைவர் திரு. ஞானசம்பந்தன் அவர்களின் கலகல கட்டுரை. கற்காலம் முதல், இக்காலம் வரை, அன்னம், கிளி, புறா, தோழி என காதலர்களுக்குத் தூதாகப் பல சென்றிருந்தாலும், இக்காலத்தில் விரல்விடு தூதே சிறந்ததென்று சொடக்குப் போட்டுச் சொல்லுகிறார் ஆசிரியர்.

வாழும் கலை: ஒருவர் சொல்வது மற்றவருக்கு அப்படியே புரிந்து விட்டால் உலகின் பல உறவு சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். ஒருவர் சொல்லாமலேயே மற்றவருக்குப் புரியுமானால் உறவுகள் பலப்படும் என்கிறார் ஸ்ரீ ஸ்ரீதர்.  

மக்களால், மக்களுக்காக: இந்தியாவை ஆட்கொண்டுள்ள பிரச்சனைகளை மூன்று வார்த்தைகளில் சொல்லிவிடலாம் என்கிறார் இராம்கி இராமகிருஷ்ணன். அதன் தீர்வுகள் எப்படி என்பதையும் ஆராய்கிறார்.

ஆசையே அலைபோல: மனிதன் ஆசைகளுக்கு அடிமை, ஆசைகளோ அலைபோல வந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கை என்பது அந்த அலையில் பயணம் செய்வதா, அல்லது விலகி நின்று வேடிக்கை பார்ப்பதா என்பதை கதையின் மூலம் விளக்குகிறார் கேயென்னார்.

தமிழ்ப் பேரவை-அழைப்பிதழ்: ஜுன்30, 31, ஜுலை 1-ம் தேதிகளில் டல்லஸில் நடக்கும் தமிழ்ப் பேரவைக்கான அழைப்பிதழும் விழா விவரங்களும்.

குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு

பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I accept that my given data and my IP address is sent to a server in the USA only for the purpose of spam prevention through the Akismet program.More information on Akismet and GDPR.