06-30-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம்.

ஆனந்தசந்திரிகை 06-30-2018 இதழில் …

  • தலையங்கம்: அமெரிக்க சுதந்திர தினத்தின் வாழ்த்துக்களோடு ஆனந்தசந்திரிகை இதழும், இலவச இணையதளத் தமிழ்ப் பள்ளியும் சேர்ந்து நடத்திய தமிழ் திறனாய்வு தேர்வின் முடிவுகள் எப்போது வருகிறது என்று தெரிவிக்கிறார் ஆசிரியர்.
  • பால் நினைந்தூட்டும்: ஒரு சேயின் ஜனனம், தாயின் மறு ஜனனம் என்று தன் தாயின் அன்பினை நினைவில் கொண்டு வருகிறார் கவிதையாக, நமது புதுக் கவிஞர் ஜானகி நம்பி நாராயணன்.
  • வாழும் கலை: இடையில் வந்த சாதி என்னும் பூதம் சென்றொழிந்தால்தான் தமிழ்ச் சமுதாயம் உய்யும் எனச் சாடுகிறார் தமது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர். உலகமே ஏற்றுக் கொண்ட மாஸ்லோவின் தேவை-படியமைப்பு-கோட்பாட்டயும் தகர்த்துவிடுகிறது இந்த சாதி என்னும் பூதம். சாதி ஒழியுமா என்பதைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
  • ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்: சத்தமின்றிச் சலனமின்றி மயாமியின் தெருக்களில் உங்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லுகிறார் ஆசிரியர் வ. செளந்தரராஜன்.
  • மக்களால், மக்களுக்காக: மனித வாழ்க்கையே ஒரு போராட்டமென்ற நிலையில், தெருவில் இறங்கிப் போராடுவது ஜனநாயக நாட்டிற்கு தேவையா என்று அலசுகிறார் இராம்கி இராமகிருஷ்ணன். ஏன் புரட்சிகளும், போராட்டங்களும் தோன்றுகின்றன என்பதையும் ஆராய்கிறார்.
  • நொடியில் மரணம்: ஆங்கில படத்தின் வேகமும், தென்னிந்திய திரையின் திடீர் திருப்பங்களையும் சேர்த்து ஒரு “ஆக்சன்” கதையினை அழகாகச் சொல்லுகிறார், கேயென்னார்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I accept that my given data and my IP address is sent to a server in the USA only for the purpose of spam prevention through the Akismet program.More information on Akismet and GDPR.