அன்பு வாசகர்களே !!!
வணக்கம்.
ஆனந்தசந்திரிகை 07-15-2018 இதழில் …
- தலையங்கம்: பனிக்கூழ் தினத்திற்கு வாழ்த்துக்கள் கூறும் ஆசிரியர் பனிக்கூழ் தினத்தன்று அமெரிக்க வாழ் தமிழர்கள் மனதை எவ்வாறு குளிர்ப்பிப்பது என்பதையும் விளக்குகிறார்.
- என் கடைசி மூச்சுக்காற்றும்: என்னுடன் பிறந்தாய், தவழ்ந்தாய், வளர்ந்தாய், இணைபிரியாமல் மகிழ்ந்தாய், என் கடைசி மூச்சுக் காற்றும் நீதான் என்று கவிஞர் யாரைச் சொல்லுகிறார் என்று அறிய இக்கவிதையை நீங்கள் படிக்கத்தான் வேண்டும்.
- வாழும் கலை: பெரியோரைப் பிழையாமை என்ற தலைப்பில் தமிழ்க் குடும்பங்களிலும் தமிழ் மேடைகளிலும் நடக்கும் தவறைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர் ஸ்ரீதர், உலகிற்கே கலாச்சாரம் சொல்லிக் கொடுத்ததாகப் பெருமை கொள்ளும் நாம், பெரியோரை மதிப்பதிலும், காலம் தவறாமையிலும் சரிவரக் கவனம் செலுத்துவதில்லை எனச் சாடுகிறார் தமது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர்.
- ஈராக் போர்முனையில்: ஷாகுல் ஹமீது நமது பத்திரிகைக்கு எழுதும் “கன்னி” கட்டுரைத் தொடர் எனலாம். அரபு நாடுகளில் வசிக்கும் இவர் நமது பத்திரிகையில் எழுதும் ஆவலில் இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறார். ஈராக் போரின் போது தாம் நேரில் கண்டவற்றை காணொளிக் காட்சி போல் சுவைபட எழுதுகிறார். தொடர்ந்து படியுங்கள்.
- மக்களால், மக்களுக்காக: மக்களின் தேவைகளை அரசாங்கம் கண்டறிந்து செயல்படுகிறாதா? அவ்வாறு செயல்பட என்ன செய்யவேண்டும். ஜனநாயகமே சிறந்ததென்று மார்தட்டிச் சொல்லும் நாம், அதை மேலும் சிறப்படைய என்ன செய்ய வேண்டும் என்பதை அலசுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.