அன்பு வாசகர்களே !!!
வணக்கம். ஆனந்தசந்திரிகை 07-31-2018 இதழில் …
- தலையங்கம்: நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, தமிழ்த் திறானாய்வுத் தேர்வின் முடிவுகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். யார் வென்றார்கள் என்பதை அறிய இவ்விதழைப் படியுங்கள்.
- வாழ ஏற்றதா தமிழகம்?: அயனாவரத்தில் நிகழ்ந்த அவலம் தமிழர்கள் அனைவரையும் தலைகுனியச் செய்து விட்டது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இன்று வாழ ஏற்ற இடமாக இருக்கிறதா? என்று கண்ணீரில் கவிதை எழுதி படிப்போர் நெஞ்சத்தை நனைக்கிறார் இராம்கி.
- வாழும் கலை: “இப்போ யார் பொய் சொல்லலை? அரசியல்ல பாதிக்குமேல பொய்தானே. வரவர பழகிப்போயிடுத்து” என்று ஏற்றுக் கொண்டு, சிறு பொய்களில் ஆரம்பித்து, பொய்க்கும், பொய்யான வாழ்க்கைக்கும், பொய் சொல்கிறவர்களுக்கும் நாம் அடிமையாகி விடுகிறோம். பொய் சொல்லுபவர்களை உங்களால் அறிய முடியுமா? அவர்களிடம் சாமர்த்தியமாக கேள்வி கேட்டு, உண்மையை உங்களால் பெற முடியுமா? என்று சோதிக்க ஒரு புதிரையும் சேர்த்துள்ளார் தனது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர். புதிருக்கு விடை கொடுத்து பரிசைப் பெறுங்கள், சவாலுக்குத் தயாரா?
- பாண்டித்துரைத் தேவர்: தமிழை மட்டுமல்லாது, தமிழுக்குச் சேவை செய்த அறிஞர்களையும் மறக்கலாகாது என்று தனது கட்டுரையின் மூலம் தமிழ்க்காவலர் வள்ளல் பாண்டித்துரைத் தேவரை தமிழ் இனத்திற்கு மீண்டும் அறிமுகப் படுத்தி பெருமை கொள்கிறார் இராமசேஷன்.
- ஈராக் போர்முனையில்: “பாலைவனத்தில் கூடாரம், வேலையோ சமையல் அறையின் அடுப்பின் அருகில். மேலேயும் சூடு. அருகிலும் சூடு” என்று சூடு பறக்க தன் கட்டுரையைத் தொடர்கிறார் ஷாகுல் ஹமீது. தொடர்ந்து படியுங்கள்.
- ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்: இந்த இதழில் வாஷிங்டன் டி.ஸி-யின் சிறப்புகளை, ஆசிரியர் சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம் கதையில் வரும் வசனங்களோடு சேர்த்து சுவைபடச் சொல்லுகிறார் வ. செளந்தரராஜன். பழைய நினைவுகளைத் தூண்டும் புதிய அனுபவம்.
- நொடியில் மரணம்: ஆங்கில படத்தின் வேகமும், தென்னிந்திய திரையின் திடீர் திருப்பங்களையும் சேர்த்து ஒரு “ஆக்சன்” கதையினை அழகாகச் சொல்லுகிறார், கேயென்னார்.
- மக்களால், மக்களுக்காக: பிரதமர் மோடி விடுத்துள்ள “2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்” என்ற அறிவிப்பு சாத்தியமா? அல்லது இது தேர்தலுக்காக நடந்தும் “மோடி மஸ்தான்” வேலையா? விவசாயிகள் சிறப்படைய என்ன செய்ய வேண்டும் என்பதை அலசுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.
Download “Anandachandrikai app” from the respective App Store:
Android Phone Users: https://goo.gl/MoA3Ni
Apple/iOS Phone Users: https://goo.gl/wirr2C