08-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 08-15-2018 இதழில் …

  • தலையங்கம்: ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் நமது தமிழ்ப்பள்ளி ஒரு புது சேவையைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு www.ilearntamilnow.com தொடங்கிய புதிய சேவை என்ன? தெரிந்து கொள்ளப் படியுங்கள்.
  • கவிதாஞ்சலி: கலைஞரின் எதிரிகள் கூட அவருடைய தமிழை நேசிப்பர். அவர் மறைவுக்கு மணீமீ, கேயென்னார், பாபாராஜ் அவர்களிடமிருந்து வந்த இரங்கல் கவிதைகளை அவருக்கு கவிதாஞ்சலியாகப் படைத்துள்ளோம். அவர் ஆத்மா சாந்தியடைவதாக.
  • வாழும் கலை: கீரி எதற்காக மண்ணில் புரள்கிறது? புரள்வதால் எப்படி பொன்னிறமாகிறது? என்ற உதாரணத்துடன் வந்தோரை உபசரிக்கும் முறையைப் பற்றி எழுதுகிறார் தனது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • குமரகுருபர ஸ்வாமிகள்: தமிழ் வளர்த்த பெரியோர்களைத் தமிழர்களுக்கு மறுஅறிமுகம் செய்து வரும் இராமசேஷன், இந்த வாரம் செய்யும் அறிமுகம் குமரகுருபர ஸ்வாமிகள். கட்டுரையைப் படிப்பதோடு விட்டு விடாமல் அவர் எழுதிய மீனாட்சி பிள்ளைத் தமிழையும் தேடி எடுத்துப் படியுங்கள்.
  • ஈராக் போர்முனையில்: குவைத்திலிருந்த ஷாகுல் ஹமீது தன் கூடாரத்தைவிட்டு ஏன் ஈராக்குக்குப் போனார். அதுவும் போர் நடக்கும் போது. என்ற திருப்புமுனையில் கட்டுரையை பாலைவனத்தைவிட சூடு பறக்கும் தகவல்களுடன் எழுதியுள்ளார் ஷாகுல்.
  • மாறனின் எதார்த்தம்: சிறு செயல்கள், சிறு கைமாறுகள், சிறிய சிந்தனை பெரிதாக மதிக்கப்படும் என்பதை சிறுகதையின் மூலம் தெளிவாகச் சொல்லுகிறார் கதாசிரியர் கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: “சுப்பையா சொன்ன சுதந்திரம் எப்பையா வந்தது?” என்ற வரிகளின் படி சுதந்திரத்தால் பெற்றதை விட விட்டதுதான் அதிகம் என்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Download “Anandachandrikai app” from the respective App Store:

Android Phone Users: https://goo.gl/MoA3Ni

Apple/iOS Phone Users: https://goo.gl/wirr2C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I accept that my given data and my IP address is sent to a server in the USA only for the purpose of spam prevention through the Akismet program.More information on Akismet and GDPR.