அன்பு வாசகர்களே !!!
வணக்கம். ஆனந்தசந்திரிகை 08-31-2018 இதழில் …
- தலையங்கம்: கடவுளின் தேசம் என்று பெருமை கொண்ட கேரளாவின் துயரம் தீர்க்க உதவுங்கள் என்ற வேண்டுதலுடன் உழைப்பாளர் தின வாழ்த்துக்களும் சொல்லுகிறது ஆனந்தசந்திரிகை ஆசிரியர் குழு.
- உழைப்பாளர் தின வாழ்த்து: காணும் இடங்களில் எல்லாம் உன் கைவண்ணம் கண்டேன் என்று உழைக்கும் வர்க்கத்தை போற்றிப் பாராட்டிக் கவிதை சொல்லுகிறார் இராம்கி.
- வாழும் கலை: பலருக்குத் தவறு செய்யும் போது தான் செய்வது தவறென்று தெரிவதில்லை. அப்படியிருக்கும் போது அதன் பாதிப்பு எப்படித் தெரியும்? எப்படியெல்லாம் ஒரு குற்றம் மற்றவரைப் பாதிக்கும் என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் வாழும் கலையில் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
- அன்னை என்னும் இறைவி: அந்திவானத்தில் வரும் நட்சத்திரங்களை எண்ண முடியுமா? அன்னையின் அன்பை அளக்க முடியுமா? உருக்கமான கேள்வியுடன் கேயென்னாரின் கவிதை.
- சேது நாட்டு வேந்தர்கள்: தமிழ் வளர்த்த பெரியோர்களைத் தமிழர்களுக்கு மறுஅறிமுகம் செய்து வரும் இராமசேஷன், இந்த வாரம் செய்யும் அறிமுகம் சேது நாட்டு வேந்தர்கள். நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கி தமிழ் வளர்த்த பெருமை இந்தப் பரம்பரையைச் சாரும் என்கிறார் ஆசிரியர் இராமசேஷன்.
- ஈராக் போர்முனையில்: “மச்சான் பயப்படாதடா, இன்னும் கல்யாணம் ஆகல. நம்மள நம்பி யாரும் இல்ல. பொறுப்புக்களும் கிடையாது. அம்மா, அப்பாக்கு வேற புள்ளைங்க இருக்காங்க” என்ற காரணத்துடன் ஈராக் போர்களத்தில் தன் நண்பர்களுடன் நுழைகிறார் ஷாகுல்.
- தரைச்சீட்டு: ஓட்டு என்பது சக்தி வாய்ந்த ஜனநாயகத்தின் ஆயுதம் அதனை பலர் காலையில் எழுந்து பல் தேய்ப்பது போல், குளிப்பது போல், மற்ற அன்றாடக் கடமையைச் செய்வது போல் செய்கிறார்கள் என்று சிறு கதையின் மூலமாக விளக்குகிறார் ஆசிரியர் மணீமி.
- மக்களால், மக்களுக்காக: ஒருமைப்பாடு துயரத்தில் ஒன்று கூடுவதல்ல, வளமையிலும் செழுமையிலும் மனத்தால் இணைந்து மனிதம் காப்பது என்பதை கேரளாவின் நிகழ்வைக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.