அன்பு வாசகர்களே !!!
வணக்கம். ஆனந்தசந்திரிகை 09-15-2018 இதழில் …
- தலையங்கம்: பிள்ளையார் சதுர்த்திக்கு, சுற்றுப்புறச் சுழலுக்குத் தீங்கு வரா வண்ணம் விழாவைக் கொண்டாட வாழ்த்துகிறது ஆசிரியர் குழு.
- எழுத்தறிவித்தவன்: ஆசிரியர் தினத்தன்று மிக எளிய கவிதை சொல்லி ஆரம்பப்பள்ளி ஆசிரியரை நினைவு கூர்கிறார் நமது இணையதளப் பள்ளி ஆசிரியை திருமதி. உமாராணி.
- வாழும் கலை: “ஒளவையாரின் வரிகளுக்கு நடுவில் படித்தால், ஒரு சமுதாயத்தில் ‘நல்லவர்கள்’ சிறுபான்மையினர் என்று சொல்வதாகத் தோன்றுகிறது” என்று கூறும் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர், சிறுபான்மையினரால், பெரும்பான்மையினருக்கு பலன் வருகிறது என்பதையும் உரைத்தாரா? என்று படிக்கலாம்.
- கிருஷ்ண ஜெயந்தி: வாயில் உலகம் காட்டி, வார்த்தையில் சாதுர்த்தியம் காட்டி, விரலால் மலையைத் தூக்கி, விழியால் மயக்கிய கண்ணனை வாழ்த்தும் கேயென்னாரின் கிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை.
- இருபத்திநான்கு ஆசிரியர்கள்: “குரு தத்தாத்திரேயர்” தனக்கு அறிவினைப் புகட்டிய இருபத்திநான்கு இயற்கை ஆசான்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? அவர்களிடமிருந்து என்ன கற்றார்? என்பதை அழகாக விளக்குகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
- ஈராக் போர்முனையில்: நானும் நண்பனும் சிற்றுந்தினுள் ஏறும்போது, ஸாம் சிரித்துக்கொண்டே “பஸ்ஸுக்கு மேல குண்டு விழுந்தா என்ன செய்வது” எனக் கேட்டார். யாரிடமும் அதற்கு பதில் இல்லை. பாக்தாத் நகரில் செல்லும் போது சிற்றுந்தினுள் நண்பர்களுடன் நடந்த உரையாடலை நினைவு கூர்கிறார் ஷாகுல்.
- மதம் கொண்ட மனம்: “உயிரோட இருக்கும்போது சாதி மதத்துக்காக சண்டை போடறவனெல்லாம், இப்போ ஒண்ணா சுடுகாட்டுக்கு போற பிணங்களைப் பாத்தாவது யோசிப்பாங்களா?” என்று மதம் கொண்ட மனத்தை வினவுகிறார் கதாசிரியர் கேயென்னார்.
- மக்களால், மக்களுக்காக: ஒரு தொழில் நிறுவனம் சமுதாயத்தின் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொள்வது, மிகவும் அரிது. தொழில் நிறுவனங்கள் எப்போதும் ஆளும் கட்சியையும், அதன் கொள்கைகளையும் பின்பற்றிச் செல்பவை. அவை எப்போதும் ஒரு பக்கமும் சேராமல் நடுவில் நிற்பவை. ஏனென்றால் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு தொழில் செய்வது கடினம் என்ற விதியிலிருந்து விலகி நின்ற தொழில் நிறுவனத்தைப் பாராட்டுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.
Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.