10-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 10-15-2018 இதழில் …

  • தலையங்கம்: நவராத்திரி நல்வாழ்த்துக்களில் தொடங்கி “ஒரு மொழி (தமிழ் மொழி) முழுமையான வளர்ச்சி அடைவது என்பது எப்போது?” என்ற கேள்விக்கு சு.கி.சிவம் ஐயா அவர்களின் பதிலையும், அதன்படி ஆனந்தசந்திரிகை என்ன செய்கிறது? என்பதனையும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
  • காந்தியை வணங்குவோம்: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆம் பிறந்த நாளில் அவரை வணங்கி வாழ்த்துக்கூறும் நினைவாஞ்சலி கவிதையைத் தருகிறார் கேயென்னார்.
  • வாழும் கலை: இருமனம் ஒருமித்தலே திருமணம் என்பார்கள். அத்தகைய உறவை எப்படி இனம் காண்பது என்பது? இவர்களின் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதா? அல்லது சொர்க்கத்திற்கு பக்கமாய் வானவெளியில் மிதக்கும் போதா? அழகான உறவின் ஆரம்பமும் அழகாகத்தானே இருக்கும் என்பதை தன் கதையின் வாயிலாக விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • கிருஷ்ண தேவராயர்: இன்று “மாநில சுயாட்சி” என்று கூவுகிறார்களே அதைக் கண்டுபிடித்தவரே இவர்தான். அன்றைய “சமஸ்தானம்” ஆட்சிமுறை இவர்தான் கொண்டு வந்தது தான் என்று கிருஷ்ணதேவராயரின் புகழ் பரப்புகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: “உள்ளே தண்ணீரில்லாத குளியலறையில் லக்ஷ்மண் குளித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துவிட்டேன். மணலால் உடல் தேய்த்தார், தண்ணீர் இல்லாமலே மீண்டும் குளித்தார். வெளியே வந்தவர் ஆளுயரக் கண்ணாடியில் முகம் பார்த்து, தலை வாரிக்கொண்டார்” என்று போர்முனையில் உடலும் உயிரும் மட்டுமல்ல மனமும் சிதிலமடைகிறது என்று பாக்பா முகாமின் அனுபவங்களைத் தொடர்கிறார் ஆசிரியர் ஷாகுல்.
  • அந்நியவாசம்: “அந்த ராமன் லட்சுமன் போல இணை பிரியாமல் இருக்க வேண்டுமென்று அவர்கள் இருவரின் தாய் தன் உயிர் பிரியும் போது கூட இதை சொல்லி விட்டு தான் போனாள். அவன் மன குமுறல் இன்னும் தீரவில்லை எப்படி தீரும் அவன் வாழும் வரை அவன் நெஞ்சை அது அரித்துக் கொண்டேதான் இருக்கும். அதுவரை அவன் பிதற்றல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்” ஏன் என்று தெரிந்து கொள்ளப் படியுங்கள் கேயென்னரின் இந்தக் கதையினை.
  • மக்களால், மக்களுக்காக: “ஏழை மாணவர்களுக்கு மட்டுமே அரசுப் பள்ளி என்ற நிலையிருப்பதால் அவை பின்தங்கி இருகின்றன. வசதி மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் பிள்ளைகளும் அரசு பள்ளிக்கு வந்தால் அவை மேம்படும். அதனால் அரசுக் கருவூலத்திலிருந்து ஊதியம் பெறும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தனியார் பள்ளியில் சேர்த்தால் அங்கு செலுத்தும் கல்விக் கட்டணத்தை அரசுக்கு அபராதமாகச் செலுத்த வேண்டும்” என்ற அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவு குரல் கொடுக்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுடன் பாடிப் பழக சின்னச் சிறிய வண்ணக் கவிதைகளை வாரி வழங்கியுள்ளார் திரு. மணீமி. தமிழ் கற்கும் குழந்தைகளுக்கு கையில் கிடைத்த கற்கண்டு.
  • பச்சை நிறமே…: நாம் அறியாத அறிவைத் தருவது அறிவியல், அதனை அழகு தமிழில் அள்ளித் தருகையில் கற்கள் மட்டுமல்ல கற்பவரின் கண்களிலும் ஆர்வம் பூக்கும் – திருமதி. லோகமாதேவியின் புதிய தொடர்.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

09-30-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 09-30-2018 இதழில் …

  • தலையங்கம்: படிப்பவர்களை “ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்று எண்ண வைக்கும் வகையில் திரு. வீராவின் மிக அழகான “மின்சாரத்தின் கதை” மின்நூலாக வெளிவருகிறது என்ற அறிவிப்புடன் தொடங்கி அதனை எவ்வாறு வாங்குவது போன்ற விவரங்களும் சேர்த்துள்ளார் ஆசிரியர்.
  • அமைதி காப்போம்: ஆண்டில் ஒரு நாள் அமைதிக்காக ஒதுக்கினால் போதுமா? என்ற கேள்வியுடன் ஆரம்பித்து, உலகில் ஒவ்வொரு நாளும் அமைதி வேண்டுமென்றால், அதனை எவ்வாறு பெறுவது என்பதை கவிதையின் மூலமாக விளக்குகிறார் இராம்கி.
  • வாழும் கலை: இல்லற வாழ்வில் தம்பதியிடையே வரும் “சந்தேகம்” என்பது “நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்” என்ற உடுமலை நாராயண கவியின் வரிகளை அடிப்படையாக கொண்டு அழகான கதையின் வாயிலாக விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • பிள்ளையார்: ஒன்றிலிருந்து பத்து வரை எண்களை வரிசைப்படுத்தி முதல் கடவுள் விநாயகரைத் துதி பாடுகிறார், கேயென்னார். பிள்ளையார் சதுர்த்திக்கு படித்து வணங்கி மகிழ்வீராக.
  • அளசிங்கம்: விவேகானந்தரின் அமெரிக்கப் பயணமும், அவர் ஆற்றிய சொற்பொழிவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அவர் அமெரிக்கா வருவதற்கு வேண்டிய பண உதவியும், மற்ற எற்பாடுகளும் செய்தது யார் தெரியுமா? அறிந்து கொள்ளப் படியுங்கள் ஆசிரியர் இராமசேஷனின் கட்டுரையை.
  • ஈராக் போர்முனையில்: “இரண்டாம் நாள் இரவில், கூடாரத்தினுள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது, எங்களருகிலேயே குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டது. அனைவரும் ஓடி வெளியே வந்தோம். கான்கீரீட்டால் ஆன ஒரு அடி கனமுள்ள பங்கர் எனப்படும் சுவருக்குள் அனைவரும் சென்று பதுங்கி கொண்டோம். எங்களில் பலருக்கு அதுதான் முதல் முதலாக மிக அருகில் பெரும் சத்தத்துடன் பொழிந்த குண்டுமழை” என்று பாக்பா முகாமின் அனுபவங்களைத் தொடர்கிறார் ஆசிரியர் ஷாகுல்.
  • நம்பிக்கை: ஒரு மனிதன் எதை இழந்தாலும் பெற்று விடலாம் அவன் தன்னம்பிகையை இழக்காதவரையில் என்று ஒரு பழமொழி உண்டு. இக்கதையில் ஒருவர் இழந்த தன்னம்பிக்கையை எவ்வாறு திரும்பப் பெருகிறார் விளக்குகிறார் கதாசிரியர் கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: ஒருவர் கற்றது, பெற்றது, வென்றது எதுவும் காப்பாற்றாது அவர் ஒழுக்கம் தவறும் போது. “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்பட வேண்டும்” என்பதனை சமீபத்திய நிகழ்வுகளால் விளக்குகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

09-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 09-15-2018 இதழில் …

  • தலையங்கம்: பிள்ளையார் சதுர்த்திக்கு, சுற்றுப்புறச் சுழலுக்குத் தீங்கு வரா வண்ணம் விழாவைக் கொண்டாட வாழ்த்துகிறது ஆசிரியர் குழு.
  • எழுத்தறிவித்தவன்: ஆசிரியர் தினத்தன்று மிக எளிய கவிதை சொல்லி ஆரம்பப்பள்ளி ஆசிரியரை நினைவு கூர்கிறார் நமது இணையதளப் பள்ளி ஆசிரியை திருமதி. உமாராணி.
  • வாழும் கலை: “ஒளவையாரின் வரிகளுக்கு நடுவில் படித்தால், ஒரு சமுதாயத்தில் ‘நல்லவர்கள்’ சிறுபான்மையினர் என்று சொல்வதாகத் தோன்றுகிறது” என்று கூறும் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர், சிறுபான்மையினரால், பெரும்பான்மையினருக்கு பலன் வருகிறது என்பதையும் உரைத்தாரா? என்று படிக்கலாம்.
  • கிருஷ்ண ஜெயந்தி: வாயில் உலகம் காட்டி, வார்த்தையில் சாதுர்த்தியம் காட்டி, விரலால் மலையைத் தூக்கி, விழியால் மயக்கிய கண்ணனை வாழ்த்தும் கேயென்னாரின் கிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை.
  • இருபத்திநான்கு ஆசிரியர்கள்: “குரு தத்தாத்திரேயர்” தனக்கு அறிவினைப் புகட்டிய இருபத்திநான்கு இயற்கை ஆசான்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? அவர்களிடமிருந்து என்ன கற்றார்? என்பதை அழகாக விளக்குகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: நானும் நண்பனும் சிற்றுந்தினுள் ஏறும்போது, ஸாம் சிரித்துக்கொண்டே “பஸ்ஸுக்கு மேல குண்டு விழுந்தா என்ன செய்வது” எனக் கேட்டார். யாரிடமும் அதற்கு பதில் இல்லை. பாக்தாத் நகரில் செல்லும் போது சிற்றுந்தினுள் நண்பர்களுடன் நடந்த உரையாடலை நினைவு கூர்கிறார் ஷாகுல்.
  • மதம் கொண்ட மனம்: “உயிரோட இருக்கும்போது சாதி மதத்துக்காக சண்டை போடறவனெல்லாம், இப்போ ஒண்ணா சுடுகாட்டுக்கு போற பிணங்களைப் பாத்தாவது யோசிப்பாங்களா?” என்று மதம் கொண்ட மனத்தை வினவுகிறார் கதாசிரியர் கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: ஒரு தொழில் நிறுவனம் சமுதாயத்தின் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொள்வது, மிகவும் அரிது. தொழில் நிறுவனங்கள் எப்போதும் ஆளும் கட்சியையும், அதன் கொள்கைகளையும் பின்பற்றிச் செல்பவை. அவை எப்போதும் ஒரு பக்கமும் சேராமல் நடுவில் நிற்பவை. ஏனென்றால் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு தொழில் செய்வது கடினம் என்ற விதியிலிருந்து விலகி நின்ற தொழில் நிறுவனத்தைப் பாராட்டுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

08-31-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 08-31-2018 இதழில் …

  • தலையங்கம்: கடவுளின் தேசம் என்று பெருமை கொண்ட கேரளாவின் துயரம் தீர்க்க உதவுங்கள் என்ற வேண்டுதலுடன் உழைப்பாளர் தின வாழ்த்துக்களும் சொல்லுகிறது ஆனந்தசந்திரிகை ஆசிரியர் குழு.
  • உழைப்பாளர் தின வாழ்த்து: காணும் இடங்களில் எல்லாம் உன் கைவண்ணம் கண்டேன் என்று உழைக்கும் வர்க்கத்தை போற்றிப் பாராட்டிக் கவிதை சொல்லுகிறார் இராம்கி.
  • வாழும் கலை: பலருக்குத் தவறு செய்யும் போது தான் செய்வது தவறென்று தெரிவதில்லை. அப்படியிருக்கும் போது அதன் பாதிப்பு எப்படித் தெரியும்? எப்படியெல்லாம் ஒரு குற்றம் மற்றவரைப் பாதிக்கும் என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் வாழும் கலையில் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • அன்னை என்னும் இறைவி: அந்திவானத்தில் வரும் நட்சத்திரங்களை எண்ண முடியுமா? அன்னையின் அன்பை அளக்க முடியுமா? உருக்கமான கேள்வியுடன் கேயென்னாரின் கவிதை.
  • சேது நாட்டு வேந்தர்கள்: தமிழ் வளர்த்த பெரியோர்களைத் தமிழர்களுக்கு மறுஅறிமுகம் செய்து வரும் இராமசேஷன், இந்த வாரம் செய்யும் அறிமுகம் சேது நாட்டு வேந்தர்கள். நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கி தமிழ் வளர்த்த பெருமை இந்தப் பரம்பரையைச் சாரும் என்கிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: “மச்சான் பயப்படாதடா, இன்னும் கல்யாணம் ஆகல. நம்மள நம்பி யாரும் இல்ல. பொறுப்புக்களும் கிடையாது. அம்மா, அப்பாக்கு வேற புள்ளைங்க இருக்காங்க”  என்ற காரணத்துடன் ஈராக் போர்களத்தில் தன் நண்பர்களுடன் நுழைகிறார் ஷாகுல்.
  • தரைச்சீட்டு: ஓட்டு என்பது சக்தி வாய்ந்த ஜனநாயகத்தின் ஆயுதம் அதனை பலர் காலையில் எழுந்து பல் தேய்ப்பது போல், குளிப்பது போல், மற்ற அன்றாடக் கடமையைச் செய்வது போல் செய்கிறார்கள் என்று சிறு கதையின் மூலமாக விளக்குகிறார் ஆசிரியர் மணீமி.
  • மக்களால், மக்களுக்காக: ஒருமைப்பாடு துயரத்தில் ஒன்று கூடுவதல்ல, வளமையிலும் செழுமையிலும் மனத்தால் இணைந்து மனிதம் காப்பது என்பதை கேரளாவின் நிகழ்வைக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

08-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 08-15-2018 இதழில் …

  • தலையங்கம்: ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் நமது தமிழ்ப்பள்ளி ஒரு புது சேவையைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு www.ilearntamilnow.com தொடங்கிய புதிய சேவை என்ன? தெரிந்து கொள்ளப் படியுங்கள்.
  • கவிதாஞ்சலி: கலைஞரின் எதிரிகள் கூட அவருடைய தமிழை நேசிப்பர். அவர் மறைவுக்கு மணீமீ, கேயென்னார், பாபாராஜ் அவர்களிடமிருந்து வந்த இரங்கல் கவிதைகளை அவருக்கு கவிதாஞ்சலியாகப் படைத்துள்ளோம். அவர் ஆத்மா சாந்தியடைவதாக.
  • வாழும் கலை: கீரி எதற்காக மண்ணில் புரள்கிறது? புரள்வதால் எப்படி பொன்னிறமாகிறது? என்ற உதாரணத்துடன் வந்தோரை உபசரிக்கும் முறையைப் பற்றி எழுதுகிறார் தனது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • குமரகுருபர ஸ்வாமிகள்: தமிழ் வளர்த்த பெரியோர்களைத் தமிழர்களுக்கு மறுஅறிமுகம் செய்து வரும் இராமசேஷன், இந்த வாரம் செய்யும் அறிமுகம் குமரகுருபர ஸ்வாமிகள். கட்டுரையைப் படிப்பதோடு விட்டு விடாமல் அவர் எழுதிய மீனாட்சி பிள்ளைத் தமிழையும் தேடி எடுத்துப் படியுங்கள்.
  • ஈராக் போர்முனையில்: குவைத்திலிருந்த ஷாகுல் ஹமீது தன் கூடாரத்தைவிட்டு ஏன் ஈராக்குக்குப் போனார். அதுவும் போர் நடக்கும் போது. என்ற திருப்புமுனையில் கட்டுரையை பாலைவனத்தைவிட சூடு பறக்கும் தகவல்களுடன் எழுதியுள்ளார் ஷாகுல்.
  • மாறனின் எதார்த்தம்: சிறு செயல்கள், சிறு கைமாறுகள், சிறிய சிந்தனை பெரிதாக மதிக்கப்படும் என்பதை சிறுகதையின் மூலம் தெளிவாகச் சொல்லுகிறார் கதாசிரியர் கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: “சுப்பையா சொன்ன சுதந்திரம் எப்பையா வந்தது?” என்ற வரிகளின் படி சுதந்திரத்தால் பெற்றதை விட விட்டதுதான் அதிகம் என்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Download “Anandachandrikai app” from the respective App Store:

Android Phone Users: https://goo.gl/MoA3Ni

Apple/iOS Phone Users: https://goo.gl/wirr2C

07-31-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 07-31-2018 இதழில் …

  • தலையங்கம்: நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, தமிழ்த் திறானாய்வுத் தேர்வின் முடிவுகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். யார் வென்றார்கள் என்பதை அறிய இவ்விதழைப் படியுங்கள்.
  • வாழ ஏற்றதா தமிழகம்?: அயனாவரத்தில் நிகழ்ந்த அவலம் தமிழர்கள் அனைவரையும் தலைகுனியச் செய்து விட்டது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இன்று வாழ ஏற்ற இடமாக இருக்கிறதா? என்று கண்ணீரில் கவிதை எழுதி படிப்போர் நெஞ்சத்தை நனைக்கிறார் இராம்கி.
  • வாழும் கலை: “இப்போ யார் பொய் சொல்லலை? அரசியல்ல பாதிக்குமேல பொய்தானே. வரவர பழகிப்போயிடுத்து” என்று ஏற்றுக் கொண்டு, சிறு பொய்களில் ஆரம்பித்து, பொய்க்கும், பொய்யான வாழ்க்கைக்கும், பொய் சொல்கிறவர்களுக்கும் நாம் அடிமையாகி விடுகிறோம். பொய் சொல்லுபவர்களை உங்களால் அறிய முடியுமா? அவர்களிடம் சாமர்த்தியமாக கேள்வி கேட்டு, உண்மையை உங்களால் பெற முடியுமா? என்று சோதிக்க ஒரு புதிரையும் சேர்த்துள்ளார் தனது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர். புதிருக்கு விடை கொடுத்து பரிசைப் பெறுங்கள், சவாலுக்குத் தயாரா?
  • பாண்டித்துரைத் தேவர்: தமிழை மட்டுமல்லாது, தமிழுக்குச் சேவை செய்த அறிஞர்களையும் மறக்கலாகாது என்று தனது கட்டுரையின் மூலம் தமிழ்க்காவலர் வள்ளல் பாண்டித்துரைத் தேவரை தமிழ் இனத்திற்கு மீண்டும் அறிமுகப் படுத்தி பெருமை கொள்கிறார் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: “பாலைவனத்தில் கூடாரம், வேலையோ சமையல் அறையின் அடுப்பின் அருகில். மேலேயும் சூடு. அருகிலும் சூடு” என்று சூடு பறக்க தன் கட்டுரையைத் தொடர்கிறார் ஷாகுல் ஹமீது. தொடர்ந்து படியுங்கள்.
  • ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்: இந்த இதழில் வாஷிங்டன் டி.ஸி-யின் சிறப்புகளை, ஆசிரியர் சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம் கதையில் வரும் வசனங்களோடு சேர்த்து சுவைபடச் சொல்லுகிறார் வ. செளந்தரராஜன். பழைய நினைவுகளைத் தூண்டும் புதிய அனுபவம்.
  • நொடியில் மரணம்: ஆங்கில படத்தின் வேகமும், தென்னிந்திய திரையின் திடீர் திருப்பங்களையும் சேர்த்து ஒரு “ஆக்சன்” கதையினை அழகாகச் சொல்லுகிறார், கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: பிரதமர் மோடி விடுத்துள்ள “2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்” என்ற அறிவிப்பு சாத்தியமா? அல்லது இது தேர்தலுக்காக நடந்தும் “மோடி மஸ்தான்” வேலையா? விவசாயிகள் சிறப்படைய என்ன செய்ய வேண்டும் என்பதை அலசுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Download “Anandachandrikai app” from the respective App Store:

Android Phone Users: https://goo.gl/MoA3Ni

Apple/iOS Phone Users: https://goo.gl/wirr2C

07-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம்.

ஆனந்தசந்திரிகை 07-15-2018 இதழில் …

  • தலையங்கம்: பனிக்கூழ் தினத்திற்கு வாழ்த்துக்கள் கூறும் ஆசிரியர் பனிக்கூழ் தினத்தன்று அமெரிக்க வாழ் தமிழர்கள் மனதை எவ்வாறு குளிர்ப்பிப்பது என்பதையும் விளக்குகிறார்.
  • என் கடைசி மூச்சுக்காற்றும்: என்னுடன் பிறந்தாய், தவழ்ந்தாய், வளர்ந்தாய், இணைபிரியாமல் மகிழ்ந்தாய், என் கடைசி மூச்சுக் காற்றும் நீதான் என்று கவிஞர் யாரைச் சொல்லுகிறார் என்று அறிய இக்கவிதையை நீங்கள் படிக்கத்தான் வேண்டும்.
  • வாழும் கலை: பெரியோரைப் பிழையாமை என்ற தலைப்பில் தமிழ்க் குடும்பங்களிலும் தமிழ் மேடைகளிலும் நடக்கும் தவறைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர் ஸ்ரீதர், உலகிற்கே கலாச்சாரம் சொல்லிக் கொடுத்ததாகப் பெருமை கொள்ளும் நாம், பெரியோரை மதிப்பதிலும், காலம் தவறாமையிலும் சரிவரக் கவனம் செலுத்துவதில்லை எனச் சாடுகிறார் தமது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • ஈராக் போர்முனையில்: ஷாகுல் ஹமீது நமது பத்திரிகைக்கு எழுதும் “கன்னி” கட்டுரைத் தொடர் எனலாம். அரபு நாடுகளில் வசிக்கும் இவர் நமது பத்திரிகையில் எழுதும் ஆவலில் இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறார். ஈராக் போரின் போது தாம் நேரில் கண்டவற்றை காணொளிக் காட்சி போல் சுவைபட எழுதுகிறார். தொடர்ந்து படியுங்கள்.
  • மக்களால், மக்களுக்காக: மக்களின் தேவைகளை அரசாங்கம் கண்டறிந்து செயல்படுகிறாதா? அவ்வாறு செயல்பட என்ன செய்யவேண்டும். ஜனநாயகமே சிறந்ததென்று மார்தட்டிச் சொல்லும் நாம், அதை மேலும் சிறப்படைய என்ன செய்ய வேண்டும் என்பதை அலசுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

06-30-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம்.

ஆனந்தசந்திரிகை 06-30-2018 இதழில் …

  • தலையங்கம்: அமெரிக்க சுதந்திர தினத்தின் வாழ்த்துக்களோடு ஆனந்தசந்திரிகை இதழும், இலவச இணையதளத் தமிழ்ப் பள்ளியும் சேர்ந்து நடத்திய தமிழ் திறனாய்வு தேர்வின் முடிவுகள் எப்போது வருகிறது என்று தெரிவிக்கிறார் ஆசிரியர்.
  • பால் நினைந்தூட்டும்: ஒரு சேயின் ஜனனம், தாயின் மறு ஜனனம் என்று தன் தாயின் அன்பினை நினைவில் கொண்டு வருகிறார் கவிதையாக, நமது புதுக் கவிஞர் ஜானகி நம்பி நாராயணன்.
  • வாழும் கலை: இடையில் வந்த சாதி என்னும் பூதம் சென்றொழிந்தால்தான் தமிழ்ச் சமுதாயம் உய்யும் எனச் சாடுகிறார் தமது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர். உலகமே ஏற்றுக் கொண்ட மாஸ்லோவின் தேவை-படியமைப்பு-கோட்பாட்டயும் தகர்த்துவிடுகிறது இந்த சாதி என்னும் பூதம். சாதி ஒழியுமா என்பதைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
  • ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்: சத்தமின்றிச் சலனமின்றி மயாமியின் தெருக்களில் உங்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லுகிறார் ஆசிரியர் வ. செளந்தரராஜன்.
  • மக்களால், மக்களுக்காக: மனித வாழ்க்கையே ஒரு போராட்டமென்ற நிலையில், தெருவில் இறங்கிப் போராடுவது ஜனநாயக நாட்டிற்கு தேவையா என்று அலசுகிறார் இராம்கி இராமகிருஷ்ணன். ஏன் புரட்சிகளும், போராட்டங்களும் தோன்றுகின்றன என்பதையும் ஆராய்கிறார்.
  • நொடியில் மரணம்: ஆங்கில படத்தின் வேகமும், தென்னிந்திய திரையின் திடீர் திருப்பங்களையும் சேர்த்து ஒரு “ஆக்சன்” கதையினை அழகாகச் சொல்லுகிறார், கேயென்னார்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

 

06-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம்.

ஆனந்தசந்திரிகை 06-15-2018 இதழில் …

 

தலையங்கம்: வடகொரியாவின் அணு ஆயுதத்தைவிட மக்களை அதிகம் அச்சுறுத்துவது எது என்பதை விளக்குகிறார் ஆசிரியர்.

இயற்கையே கடவுள்: பஞ்சபூதங்களால் நிரம்பிய உலகை, மதமும், மதம் சார்ந்த நம்பிக்கைகளும் சூழ்ந்து வருகிறது. அவைகளால் உருவாக்கப்பட்ட “மாயமான்” தோற்றத்தைப் புரிந்து கொண்டு, நாம் போற்றவேண்டியதும், துதிக்க வேண்டியதும் இயற்கையே என்பதைக் கவிதை பாடி விளக்குகிறார் ஸ்ரீ ஸ்ரீதர்.

தந்தையர் தின வாழ்த்துகள்: தந்தையின் கண்களின் நீரில் அன்பு வெளிப்படும், ஆனால் அதற்கு அளவுகோல் இல்லை என கவிதைபாடி, தந்தையின் உயர்ந்த உள்ளத்தை வாழ்த்துகிறார் கேயென்னார்.

விரல்விடு தூது: முனைவர் திரு. ஞானசம்பந்தன் அவர்களின் கலகல கட்டுரை. கற்காலம் முதல், இக்காலம் வரை, அன்னம், கிளி, புறா, தோழி என காதலர்களுக்குத் தூதாகப் பல சென்றிருந்தாலும், இக்காலத்தில் விரல்விடு தூதே சிறந்ததென்று சொடக்குப் போட்டுச் சொல்லுகிறார் ஆசிரியர்.

வாழும் கலை: ஒருவர் சொல்வது மற்றவருக்கு அப்படியே புரிந்து விட்டால் உலகின் பல உறவு சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். ஒருவர் சொல்லாமலேயே மற்றவருக்குப் புரியுமானால் உறவுகள் பலப்படும் என்கிறார் ஸ்ரீ ஸ்ரீதர்.  

மக்களால், மக்களுக்காக: இந்தியாவை ஆட்கொண்டுள்ள பிரச்சனைகளை மூன்று வார்த்தைகளில் சொல்லிவிடலாம் என்கிறார் இராம்கி இராமகிருஷ்ணன். அதன் தீர்வுகள் எப்படி என்பதையும் ஆராய்கிறார்.

ஆசையே அலைபோல: மனிதன் ஆசைகளுக்கு அடிமை, ஆசைகளோ அலைபோல வந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கை என்பது அந்த அலையில் பயணம் செய்வதா, அல்லது விலகி நின்று வேடிக்கை பார்ப்பதா என்பதை கதையின் மூலம் விளக்குகிறார் கேயென்னார்.

தமிழ்ப் பேரவை-அழைப்பிதழ்: ஜுன்30, 31, ஜுலை 1-ம் தேதிகளில் டல்லஸில் நடக்கும் தமிழ்ப் பேரவைக்கான அழைப்பிதழும் விழா விவரங்களும்.

குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு

பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

05-31-2018 ஆனந்தசந்திரிகை

ஆனந்தசந்திரிகை 05-31-2018 இதழில் …

  • தலையங்கம்: “மெமோரியல் டே” வாழ்த்துக்கள் கூறலாமா? கூடாதா? விளக்குகிறார் ஆனந்தசந்திரிகை ஆசிரியர்.
  • அஹிம்சைக் கொலை: அண்ணல் பிறந்த நாட்டிலே அஹிம்சையைக் கொல்லுகிறார்கள் என்று தூத்துக்குடி சம்பவத்தை நினைத்து கவிதையில் மனம் பதைக்கிறார் இராம்கி.
  • வாழும் கலை: இகிகாய் என்றால் தெரியுமா? பள்ளியை முடித்துவிட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பது மாணவப் பருவத்தின் குழப்பம். அவர்களுக்கு எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் ஸ்ரீ ஸ்ரீதரன்.
  • நான் இங்கே இருக்கிறேன்: தவறு சிறியதாக இருந்தாலும், அதன் விளைவு விபரீதமாக அமையலாம் என்பதை நெஞ்சைப் பிழியும் விதத்தில் கதையாகச் சொல்லுகிறார் முரளி.
  • ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்: சியேட்டல் நகரில் வாழும் மக்களைப் பத்து விதமாகப் பிரிக்கலாம் என்கிறார் கட்டுரை ஆசிரியர் வ. செளந்தரராஜன். நீங்கள் எந்த ரகம் என்றும் யோசிக்கலாம்.
  • வெற்றியின் விலை? விலை கொடுத்து வாங்குவதில்லை வெற்றி. ஆனால், வெற்றி அதன் விலையை எடுத்துக் கொள்ளும் என்கிறார் கதாசிரியர் வீரா (சென்ற இதழின் தொடர்ச்சி).
  • மக்களால், மக்களுக்காக: சமுதாய அக்கறையுடன், சட்ட, சமூக, தொழில்நுட்ப, அரசியல் மாற்றங்கள் தேவை என்பதை வலியுறுத்தும் தொடர் கட்டுரையைத் தொடங்கி, மாறாதது தேறாது என்கிறார் இராம்கி.
  • கண் திறக்க வேண்டும்: வளர வேண்டியது குழந்தைகள் அல்ல, பெற்றோர்கள் தான் என்று ஒரு காதல் கதையின் மூலம் விளக்குகிறார் கேயென்னார்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க, கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு
  • பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

ஆனந்தசந்திரிகை 05-31-2018 இதழ் வெளியாகிவிட்டது. நீங்கள் படித்து விட்டீர்களா?