01-15-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள். ஆனந்தசந்திரிகை 01-15-2019 இதழில் …

  • தலையங்கம்: வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் கூறும் ஆசிரியர் குழு, உழவர் திருநாளில் உழவனின் உயர்வுக்கு பாடுபடுவோம் என்று அறிவுறுத்துகிறார்.
  • பொங்கல் தினம் பிறந்ததம்மா: பொங்கல் வாழ்த்துக் கவிதை – கேயென்னாரும், இராம்கியும் கலந்தாலோசித்து எழுதிய கூட்டு முயற்சிக்கவிதை.
  • வாழும் கலை: “என் வாழ்க்கைக்கு ஒரு புது லட்சியம் கிடைச்சிருக்கு. இதை இழக்க எனக்கு மனசில்லை. தவிர, நிறைய மொட்டுகள் கருகாமல் இருக்க, வாடிப்போன பூவிலேர்ந்து ஒரு இதழ் விழுந்தா என்ன? விழட்டுமே!” என்று ஒரு புதிய பாதையைக் காட்டுகிறார்” ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • ப்ரிடிஷ் நூலகம்: தான் சென்ற ப்ரிடிஷ் நூலகத்தை பற்றி எழுதும் ஆசிரியர் இராமசேஷன், நமது நாட்டில் உள்ள எழுத்தாளர்களின் நிலமையை எண்ணி ஆதங்கப் படுகிறார்.
  • ஈராக் போர்முனையில்: “டிசம்பர் மாதத்தில் திக்ரித்தில் முதல் முதலாக குண்டு வெடித்தது. அனைவரும் ஓடி பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் பதுங்கினோம். அதன் அருகில் இருந்த கழிப்பறைக்குள் கோவாவின் பெர்னாண்டோ மாட்டிக் கொண்டான். கழிப்பறை நெகிழியால் செய்யப்பட்டது. குண்டு விழுந்ததும் தெறித்த சிறு கற்கள் கழிப்பறையை துளைத்து கொண்டு அவனது கால்களை பதம்பார்த்தது.”  என்று திக்-திக் இதயம் துடிக்கும் வகையில் கட்டுரையைத் தொடர்கிறார் ஆசிரியர் ஷாகுல்.
  • இணையில்லா தோழிக்கு: தமிழ்ப்பணிக்கு விருது பெற்ற ஆசிரியர் முனைவர். திருமதி. லோகமாதேவிக்கு ஆனந்தசந்திரிகையின் அன்புகலந்த வாழ்த்துக்கள்.
  • சிவா ஒரு புதிய மனிதன்: “வெளி உலகத்திற்கு சிவராமகிருஷ்ணன் மிகவும் அபிமானமுள்ளவராக இருந்தாலும், வீட்டில் குழந்தைகளிடமும் மனைவியிடமும் பொறுமையில்லாதவராக இருந்தார். எப்பொழுதும் எதையோ நினைத்துக் கொண்டும், தன்னை விட பெரிதாக வளர்த்தவர்களை கண்டு பொறாமை கொண்டும் வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தார்” என்று மனித மனத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார் இக்கதையில் கேயென்னார்.
  • மலருக்கு மனம் இருந்தால்: மலருக்கு மணம் உண்டு என்று அனைவரும் அறிவோம். ஆனால் இக்கவிதையில் மலருக்கு மனம் உண்டு, அதில் எண்ணங்கள் உண்டு என்று மலரின் எண்ண ஓட்டத்தை கவிதையாய் வடிக்கிறார் கேயென்னார்.
  • திரை விமர்சனம்: இந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான ஆனந்தவிகடன் விருதை பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படத்தை “சேற்று மண் இறுகிகெட்டிப்பட்டதைபோல அதிகம் பச்சையில்லாத ஒரு கதைக்களம். பல சமயங்களில்  காமிரா பெரும்பாலும் செந்நிறப்பரப்பும் இடையிடையே பச்சை சதுரங்களாக வயல்களுமாய் உயரத்திலிருந்து அந்த கிராமத்தை கவிதையாகக் காண்பிக்கிறது.” என்று தன் அழகான வரிகளால் விமர்சிக்கிறார் திருமதி. லோகமாதேவி.
  • மக்களால், மக்களுக்காக: “பிரதமர் மோடி சமீபத்தில் கொண்டு வந்த இடஒதுக்கீடு பற்றிய அரசியல் சட்ட அமைப்பு சீர்திருத்தம் மிகவும் வரவேற்கத்தக்கது. ஜாதி அடிப்படையில் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியாக கல்வி நிறுவனங்களிலும், அரசாங்க வேலை வாய்ப்புக்களிலும் 10 சதவீதம் இடங்கள் வருமானம் குறைந்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும்” என்பதை மனம் திறந்து பாராட்டுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • தமிழ் நண்பர்கள் – பொங்கல் விழா: டல்லஸ் மாநகரில் நடந்த 4000+ தமிழர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அளவிலான பொங்கல் விழாவினை விளக்குகிறார் ஆசிரியர் சசிகலா.
  • மழலை மழைத்துளிகள்: தை தை என்று தாளமிட்டு வரும் மழலை கவிதையில் பொங்கலின் சிறப்பை குழந்தைகளுக்கு விளக்குகிறார் கவிஞர் மணிமீ. திருவள்ளுவர் தினத்திற்கும் ஒரு மழலைக் கவிதை உண்டு படித்துக் கொண்டாடுங்கள்.
  • பச்சை நிறமே…: உயிர்சிற்பக்கலை எவ்வாறு எந்த வித தாவரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது போன்ற உயிரியல் தகவல்களைத் தருகிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

12-31-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆனந்தசந்திரிகை 12-31-2018 இதழில் …

  • தலையங்கம்: வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் ஆசிரியர் குழு, இந்த வருடம் உங்கள் செயல் திட்டப்பட்டியலில், குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் சேர்ந்துக் கொள்ளுங்கள். உங்கள் தீர்மானம் நிறைவேற எங்களால் உதவமுடியுமானால் தயங்காமல் கேளுங்கள்” என்ற விண்ணப்பத்தையும் சேர்த்துள்ளார்.
  • தமிழினத்தின் அடையாளம்: கவிஞர் ந. வீரா தமிழினத்தின் அடையாளமாக யாரைச் சொல்லுகிறார்? சூரியனுக்கு வானம்சலித்தபோதெல்லாம் எவருடைய வார்த்தைகளுக்குள் வந்து போவான்? படிக்க வேண்டிய பரவசப்படுத்தும் கவிதை.
  • வாழும் கலை: பகவத்கீதையில சொன்ன பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் முதல் பதஞ்சலியின் எட்டு யோகநிலையைப் பேசி, சரவணனுக்குக் கிடைத்த சினிமாயோகம் வரை அழகாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர். உங்களுக்கு எந்த யோகம் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
  • இராமானுஜம்: கணித மேதையின் தேற்றம் மட்டும் படித்தால் போதாது அவருடைய தோற்றத்தையும் கொண்டாடுவோம் என்கிறார் கவிஞர் ந. வீரா.
  • பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்: பழையசோறு போட்ட பாட்டிக்கு ஒரு ஊரையே எழுதிக் கொடுத்த மன்னர் கதை தெரியுமா? செவி வழிக் கதையினைப் பகிர்கிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: “மறுநாள் முதல் உடுக்க ஆடை இல்லை. பொருத்தமே இல்லாத அளவில் ஒரு காற்சட்டையும், பனியனும் தந்தார்கள். கயிறால் அந்த காற்சட்டைக்கு மேல் கட்டிய பிறகுதான் அது இடுப்பில் நின்றது” என்று இடுப்பில் நிற்காத காற்சட்டையும், இதயத்தைவிட்டு அகலாத தீ விபத்தையும் விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர் ஷாகுல்.
  • குழந்தையின் கனவு: மிதுன் அம்மாவிடம் கதை கேட்டவாறே கண்களை மூடிட, அவன் கனவும் மெதுவாக விரிந்தது. அதே அவரை செடியும் காயும் கண்ணில் தெரிந்தது, அவரைக்காயைப் பறித்தவுடன் அது அம்மா வடிவில் தேவதையானது. அவன் அம்மாவை கண்டதும் ஓடிச்சென்று கட்டிப்பிடிக்க அவள் அவனுக்கும் முத்தம் கொடுக்க அந்த இடங்களில் எல்லாம் பொன்மயமானது” என்று குழந்தைகளின் கண்கள் வாயிலாகக் கனவு காண்கிறார் கேயென்னார்.
  • மரியா ஈன்ற மகவு: துயரம் தொலைந்திட தூயவன் பிறந்த கதையைக் கவிதையாய் வடிக்கிறார் கேயென்னார்.
  • திரை விமர்சனம்: “Mountain between us” என்று இவர்களிருவரும் சிக்கிக்கொண்டிருக்கும், முடிவற்றதுபோல தோற்றமளிக்கும் பனிமலையையல்ல இக்கதையும் அதன் தலைப்பும் பேசுவது, உயிர்வாழவேண்டும் என்னும் ஆதார இச்சையும், அவரவர் வாழ்வு குறித்தான விழைவுகளும் அச்சங்களும் கவலைகளும் திட்டங்களுமாக இவர்கள் இருவருக்கும் இடையில் உருவாகியிருந்த மாபெரும் பனிமலையொன்றினைக்குறித்தும் அது மிக மெல்ல அவர்களுக்குள் உருவாகும் காதலின் வெம்மையில் கரைவதையுமே இத்திரைப்படம் பேசுகின்றது” என்று படிப்போரை பார்க்கத் தோன்றும் வகையில் விமர்சிக்கிறார் திருமதி. லோகமாதேவி.
  • மக்களால், மக்களுக்காக: “காக்கை குருவிகளைப் பார்த்து வளர்ந்த காலம் முடிந்து, வண்ண வண்ண டிரோன்கள் பறப்பதைப் பார்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. உலகின் ஒவ்வொரு மூலையும் கண்காணிக்கும் தொழில் நுட்பமும் தொலைவில் இல்லை” என்று தொல்லைதரும் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத் தீர்வு காண்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுக்கான புத்தாண்டுக் கவிதை, தங்கநிலா, காற்றின் திசை என்று குழந்தைகளைக் குஷிப்படுத்துகிறார் மழலை கவிதைகளில் கவிஞர் மணிமீ.
  • பச்சை நிறமே…: ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இளவரசி விக்டோரியா, இந்தியா வந்திருந்த போது ஹூக்ளி நதியானது இங்கிலாந்தின் உள்ள தேம்ஸ் நதியைப்போல் காட்சியளிக்க வேண்டுமென்பதற்காக கொல்கத்தாவிற்கு வருகை தரும்போது இதை கொண்டுவந்து ஹூக்ளியில் விட்டதாகக் கூறப்படுகிறது என்று ஆகாயத்தாமரை பற்றிய ஆச்சரியமான தகவல்களைத் தருகிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

12-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 12-15-2018 இதழில் …

  • தலையங்கம்: பரிசு என்பது அன்பின் வெளிப்பாடு. நான் உன்னைப் பற்றி யோசித்து உன் தேவையை அறிந்து, உனக்கு என்ன பிடிக்கும் என்று தேர்ந்தெடுத்து வாங்கி வந்துள்ளேன் என்று சொல்லுவது. ஆனந்தசந்திரிகையும் கிறிஸ்துமஸ் தினத்தில் வாசகர்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப் போகிறது. அது என்னவென்று விளக்கியுள்ளார் ஆசிரியர். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
  • அர்த்தம் கூடியிருந்தது: ஒருவருடன் அன்பை பகிரும் போது, அதன் வெளிப்பாடாய் அவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுக்கும் போது நம்மிடம் எதுவும் குறைவதில்லை. ஆனால் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் கூடுகிறது என்பதை கவிதையின் மூலமாகப் பாடியுளார் கவிஞர் ந. வீரா.
  • வாழும் கலை: பேரம் பேசுவது “சரியா? தவறா?” என்பது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள். உங்கள் பதில் எதுவாக இருந்தாலும், ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரின் இக்கதையைப் படித்த பிறகு அது மாறும். கதையைப் படித்து பின் உங்கள் விடையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  • மகாகவி பாரதி: மகாகவி பாரதிக்கு பிறந்தநாள் கவிதாஞ்சலி. பாரதி கண்ட கனவில் நிகழ்ந்தது எது? இன்னும் நிகழாதது எது? என்று தரம் பிரித்து ரெளத்திரம் கொள்கிறார் ஆசிரியர்.
  • ம.ப.பெரியசாமி தூரன்: “தொண்டில் கனிந்த தூரன்” எனும் நூல் சிற்பி பாலசுப்பிரமணியம் என்பவரால் தொகுக்கப்பட்டு “பாரதீய வித்யா பவன்” கேந்திரா வெளியீடாக வெளிவந்துள்ளது. இவர் மாற்றுக் கட்சிக்காரர், திராவிட சிந்தனை இல்லாதவர் என்பதாலோ என்னவோ தமிழகத் “தமிழ் விரும்பி அரசின்” பார்வை இவர்மீது படவில்லை!” என்று ஆச்சரியப்படுகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஐய்யனைக் காண்போம்: கார்த்திகை-மார்கழி மாதத்தில் மாலை போட்டு மலையேறும் ஐய்யப்ப பக்தர்களுக்காக கவிதை பாடிச் சரணம் சொல்லுகிறார் கேயென்னர்.
  • ஈராக் போர்முனையில்: கண்முன்னே, என்னுடைய அனைத்து பள்ளி, ஐடிஐ, தொழில் பழகுநர் சான்றிதழ்கள், முன்பு வேலைபார்த்த நிறுவனங்களின் அனுபவ கடிதங்கள், இன்னும் சிலநினைவுபொருட்கள், அக்காவின் திருமணத்தின்போது மச்சான் பரிசளித்த மோதிரம், கடவுச்சீட்டு, கப்பல் வேலைக்கான சி டி சி மற்றும் அதற்குத் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் சில நிமிடங்களில்  சாம்பலாகிவிட்டது.  அடுத்து என்ன? என்ற கேள்வியை அனைவருக்கும் விட்டுச் செல்லுகிறார் ஷாகுல்.
  • அவள் அப்படித்தான்: “அப்படியே தலையில் இடி இறங்கியதுப் போல் இருந்தது முத்துலெட்சுமிக்கும், பழனிக்கும். அந்த ஒருநொடியில் அவர்களது எண்ணங்கள் அலைப்பாயத் தொடங்கியது. தன் மகளுக்கு என்ன நடந்ததோ? எங்கு இருக்கிறாளோ என்று. அப்பொழுது அங்கு ஒரு கார் வந்து நின்றது.” நடந்தது என்னவென்று அறிய படியுங்கள் கேயென்னாரின் இக்கதையினை.
  • திரைவிமரிசனம்:2.0: திருமதி. லோகமாதேவி எழுதும் புதிய பகுதி மாயசந்திரிகையில்” திரைவிமரிசனம், அதுவும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி பட விமரிசனத்துடன் விமரிசையாகத் தொடங்குகிறது.
  • மக்களால், மக்களுக்காக: “இவர் தனது கடைசி 10 ஆண்டுகளாக அணியும் காலுறை மக்களின் கவனத்தைப் பெற்றது. அவருடைய இறுதி ஊர்வலத்தில் அவர் அணிந்திருந்த காலுறை கப்பற்படைக்கு மரியாதை செய்வதாக அமைத்திருந்தார்கள்?” என்று காலம் சென்ற ஜார்ஜ் ஹெச். டபிள்யு. புஷ் அவர்களின் காலுறை சொன்ன கதைகளைத் தொகுக்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: கிறிஸ்துமஸ், சாண்டா, ரயில் வண்டி என குழந்தைகளுக்குப் பிடித்த அனைத்தையுமே மழலை கவிதைகளில் பரிசாய்த் தருகிறார் கவிஞர் மணீமி.
  • பச்சை நிறமே…: நாம் அனவருமே காப்பியில் சிக்கரி கலந்து குடித்துள்ளோம். சிக்கரி உடல் சூட்டைத் தணித்து மூச்சுத் திணறல், அஜீரணம், தலைவலி ஆகியவற்றை நீக்குகிறது. மூளையை சுறுசுறுப்பாக்கும் மருந்தாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் சிக்கரி பயன்படுகின்றது. சிக்கரி என்பது விதையா, வேரா? இலையா? அல்லது காயா? தெளிவாக விளக்குகிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

11-30-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 11-30-2018 இதழில் …

  • தலையங்கம்: இது ஒரு மகிழ்ச்சியும் துயரமும் கலந்த ஒரு தலையங்கம். மகிழ்ச்சியும் இரட்டிப்பாகியுள்ளது, துயரமும் இரட்டிப்பாகியுள்ளது. இத்தகையத் தருணங்களில் நமது கடமையை நினைவுப்படுத்துகிறார் ஆசிரியர்.
  • கஜாவின் கதை: நமது அரசியல்வாதிகளின் செயல்பாட்டைக் கஜாவின் கதை என்ற கவிதையின் மூலமாகத் சாடியுளார் கவிஞர் ந. வீரா.
  • வாழும் கலை: நாம் எல்லோரும் கற்க வேண்டிய கலைகளில் ஒன்று கற்பனையாக மற்றவர் உள்ளத்தில் புகுந்து அவர் உள்ளக் கிளர்ச்சியை அறிதல், ஆங்கிலத்தில் சொன்னால் “To put yourself in their shoes” அதன் அவசியத்தை இக்கதையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • தொடாமல் மலர்ந்த கவிதை: காதலும் கவிதையும் பிரிக்க முடியாத ஒன்று. உடனிருந்தாலும் விலகிச் சென்றாலும் நிறம் மாறித் தொடர்ந்து வரும் என்கிறார் கவிஞர் ந. வீரா.
  • பிராமணத் தமிழ்: பிராமணத் வட்டாரத் தமிழின் செழுமையை விளக்குகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: போர்முனையில் ஏற்படும் அமைதி நிலைக்குமா? இருந்தாலும் அங்கே அமைதியான வாழ்க்கையிருந்தது என்பதை அழகாக விளக்கிப் படிப்போரை ஆசுவாசப்படுத்துகிறார் ஷாகுல்.
  • நன்றி நவில்தல் ஒரு சுவையே: காலம் பல மாற்றங்களைக் கொண்டுவந்தாலும் “மனிதனின் நன்றி மறவா செயல்” நாளும் பாராட்டப்பட வேண்டியது என்பதை கவிதை பாடிச் சொல்லுகிறார் கேயென்னர்.
  • பறந்து வா பாட்டி: பாசமிகு அழைப்பிற்கு பறந்து செல்லுவாள் பாட்டி, என்பதை முதன் முறையாக ஆகாயமார்க்கமாகப் பறந்து செல்லும் பாட்டியின் கதையில் காட்டுகிறார் கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: “ரோம் நகரம் தீப்பற்றி எறியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். இந்தக் கதையைப் படித்தவர்கள் இப்படி ஒரு மன்னன் இருந்தானா? மக்கள் துயரப்படும் போது அவர்களுக்கு உதவ வேண்டிய செயல்களைச் செய்யாமல் மொட்டை மாடியில் நின்று கொண்டு ஒரு மன்னனால் எவ்வாறு பிடில் வாசித்து மகிழ முடிந்தது?” என்ற கேள்விக்கு நிகழ்கால உதாரணம் தருகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுக்குப் பிடித்த தோசை, நாய்குட்டி, நன்றி நவிதல் நாள் விருந்து அனைத்தையுமே மழலை கவிதையாய்த் தருகிறார் கவிஞர் மணீமி.
  • பச்சை நிறமே…: அல்லியின் அகன்ற இலை 30 கிலோ வரை எடையைத் தாங்குமாம். ஆச்சரியத்தை அள்ளித் தெளிக்கிறார் இந்த இதழில் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

11-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 11-15-2018 இதழில் …

  • தலையங்கம்: உலகமெல்லாம் வாழும் குழந்தைகளுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் கூறி உலகநாடுகளும், அமெரிக்க தமிழ்ச் சங்கங்களும் குழந்தைகள் தினத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆராய்கிறார் ஆசிரியர்.
  • குழந்தைகள் தினம்: குழந்தைகள் என்றாலே சந்தோஷம், குழந்தைகளை வாழ்த்திக் கவிதை எழுவது என்றால் இரட்டிப்பு சந்தோஷம். குழந்தைகள் தின வாழ்த்துக் கவிதையைத் தருகிறார் இராம்கி.
  • வாழும் கலை: பாலியியல் கல்வி அவசியமானது. இந்தியாவில் உள்ள 20 கோடி இளைய தலைமுறையினருக்கு இந்தக் கல்வி இன்றும் கிடைப்பதில்லை. அதன் விளைவுகளைக் கதையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • முத்துசாமி ஐயர்: இந்தியர் எவருக்கும் கிடைக்காத உயர்பதவியான சென்னை ஹைக்கோர்ட் தலைமை ஜட்ஜ் பதவி பெற்ற முத்துசாமி ஐயரைப் பற்றிய சுவையான தகவல்களைப் பகிர்கிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: “டைகிரிஸ் ஆற்றை அரண்மனைக்குள் வரும்படி பாதை அமைத்து செயற்கையாக நீர்விழ்ச்சி அமைத்திருந்தனர். நீர்வீழ்ச்சி கீழே விழும் இடத்தில் பெரிய நீச்சல்குளமும், குளியலறை, நவீன சமையலறை போன்ற அனைத்து வசதிகளும் அருகில் இருந்தன. சர்வாதிகார மன்னன் சதாமின் ஆடம்பரம் அங்கு தெரிந்தது” என்று சதாமின் வாழ்க்கை முறையை வர்ணிக்கிறார் ஷாகுல்.
  • விடை பெற்ற கனவு: “பாழாய்ப் போவதற்கா, காலத்தை விரயமாக்கி பட்டப் படிப்பை பூர்த்தி செய்தோம்?இக்கட்டான சூழலில் இரண்டு தோள்கள் ஆதரவாய் சேர்ந்தால், குடும்பப் பாரம் சுமக்கும் நிரஞ்சனுக்கு எத்தனை ஆதரவாய் இருக்கும்?” என்று எண்ணும் மனைவியின் எண்ணம் நிறைவேறியதா? என்று படித்தறியுங்கள் கேயென்னரின் இந்தக் கதையினை.
  • மக்களால், மக்களுக்காக: “நமது சமுதாயத்தில் திருமணம் என்பது சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட, அங்கீகரிக்கப்பட்டச் சடங்கு. அது காதலைத் தவிர பலவேறு காரணங்களால் நிகழ்த்தப்படுவது. காதல் இல்லையேல் சாதல் என்ற பாரதியின் வரிகளை நினைவு படுத்துகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: சிறு கவிதைகளால் படிப்பவர்களைக் சிறு குழந்தைகளாக்கிப் பார்க்கும் வல்லமையுள்ள திரு. மணீமி கவிதைகள் இந்த இதழுக்குச் சிறப்பு.
  • பச்சை நிறமே…: ஆர்கிட் பூக்கள் ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் இருக்கிறதாம். நமது இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் பெயரில் கூட ஒரு மலர் இருக்கிறதாம். மலர்களை அள்ளித் தெளித்து அசத்துகிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

10-31-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 10-31-2018 இதழில் …

 

  • தலையங்கம்: இனிய தீபாவளித் திருநாளுக்கு நல்வாழ்த்துக்கள் கூறி, பாதுகாப்பான, சூழ்நிலையை அசுத்தப்படுத்தாத வகையில் தீபாவளியை கொண்டாட அறிவுறுத்தியுள்ளார் ஆசிரியர்.
  • தீபாவளி வாழ்த்துக் கவிதை: தீபாவளி வாழ்த்துக் கவிதையைத் தருகிறார் இராம்கி.
  • வாழும் கலை: அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை. மதமும் ஜாதியும் என் செய்யும் என்பதனை நட்பின் அன்பால் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • திருமங்கைஆழ்வார்: அவரை மணக்க குமுதவல்லி நிபந்தனை ஒன்று விதித்தார். ‘நீர் எக்குலத்தாராய் இருப்பினும் வைணவராயின் என்னை மணக்கலாம் என்றார். அதனை ஏற்று நீலன் திருநிறையூர் நம்பி அவர்களிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு திருமண்காப்புடம் குமுதவல்லி நாச்சியார் முன் நின்றார். ஏன் என்று அறிய படியுங்கள் ஆசிரியர் இராமசேஷனின் கட்டுரையை.
  • ஈராக் போர்முனையில்: “மும்பையின் வாழ்க்கை நினைவுக்கு வந்தது. ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையுடைய மாடி அறை. கோடையில் பகலில் அறையில் இருக்கவே முடியாது. அனல் போல் கொதிக்கும் வெப்பம். அறையிலிருந்து மாஹிம் ரயில் நிலையம் போகும் வழியில் நடைபாதையில் இருக்கும் மரத்துக்குக் கீழ் உள்ள சுவரில் தான் பெரும்பான்மையான நாட்களை கழித்திருப்பேன். பட்டினியாக வேலை தேடிய நாட்களே அதிகம். எனவே மும்பை திரும்பி போவதில்லை என்பதில் உறுதியானேன் என்று துணிந்த ஷாகுல் எங்கே போனார் என்று படித்தறியுங்கள்.
  • உன் நினைவாய்: “முகத்தைத் துடைத்து விட்டு பக்கத்திலிருந்த சின்னப் பெட்டிக்குள் இருந்த குங்குமத்தை எடுத்தாள். “இப்ப வைக்காதே உடனே அழிஞ்சு போயிடும்” அஜித் சொன்னதை பொருட்படுத்தாமல் பொட்டு வைத்து விட்டு சாய்ந்து கொண்டு “பசிக்குது அஜித்”. அவன் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.” அவள் குங்குமம் நிலைத்ததா என்று படித்தறியுங்கள் கேயென்னரின் இந்தக் கதையினை.
  • மக்களால், மக்களுக்காக: “கடந்த காலத்தைக் கண்ணாடியில் மட்டும் பார்த்துக் கொண்டு எதிர்காலத்தை நோக்கிக் கார் ஓட்ட முடியாது. அவ்வப்போது கண்ணாடியைப் தற்காப்புக்காகப் பார்க்கலாம், நாம் போக வேண்டிய பாதை முன்னால் உள்ளது என்பதை நினைவில் கொள்வோமாக” என்று நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவு குரல் கொடுக்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுடன் பாடிப் பழக தீபாவளி பற்றிய வண்ணக் கவிதைகளை வாரி வழங்கியுள்ளார் திரு. மணீமி. தீபாவளிக்கு கிடைத்த இனிப்பு.
  • பச்சை நிறமே…: நிறம் மாறும் மனிதர்கள் உண்டு, விலங்குகளும் உண்டு. பூக்களும் உண்டா? வியப்பில் ஆழ்த்துகிறார். – திருமதி. லோகமாதேவியின் புதிய தொடர்.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

10-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 10-15-2018 இதழில் …

  • தலையங்கம்: நவராத்திரி நல்வாழ்த்துக்களில் தொடங்கி “ஒரு மொழி (தமிழ் மொழி) முழுமையான வளர்ச்சி அடைவது என்பது எப்போது?” என்ற கேள்விக்கு சு.கி.சிவம் ஐயா அவர்களின் பதிலையும், அதன்படி ஆனந்தசந்திரிகை என்ன செய்கிறது? என்பதனையும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
  • காந்தியை வணங்குவோம்: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆம் பிறந்த நாளில் அவரை வணங்கி வாழ்த்துக்கூறும் நினைவாஞ்சலி கவிதையைத் தருகிறார் கேயென்னார்.
  • வாழும் கலை: இருமனம் ஒருமித்தலே திருமணம் என்பார்கள். அத்தகைய உறவை எப்படி இனம் காண்பது என்பது? இவர்களின் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதா? அல்லது சொர்க்கத்திற்கு பக்கமாய் வானவெளியில் மிதக்கும் போதா? அழகான உறவின் ஆரம்பமும் அழகாகத்தானே இருக்கும் என்பதை தன் கதையின் வாயிலாக விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • கிருஷ்ண தேவராயர்: இன்று “மாநில சுயாட்சி” என்று கூவுகிறார்களே அதைக் கண்டுபிடித்தவரே இவர்தான். அன்றைய “சமஸ்தானம்” ஆட்சிமுறை இவர்தான் கொண்டு வந்தது தான் என்று கிருஷ்ணதேவராயரின் புகழ் பரப்புகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: “உள்ளே தண்ணீரில்லாத குளியலறையில் லக்ஷ்மண் குளித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துவிட்டேன். மணலால் உடல் தேய்த்தார், தண்ணீர் இல்லாமலே மீண்டும் குளித்தார். வெளியே வந்தவர் ஆளுயரக் கண்ணாடியில் முகம் பார்த்து, தலை வாரிக்கொண்டார்” என்று போர்முனையில் உடலும் உயிரும் மட்டுமல்ல மனமும் சிதிலமடைகிறது என்று பாக்பா முகாமின் அனுபவங்களைத் தொடர்கிறார் ஆசிரியர் ஷாகுல்.
  • அந்நியவாசம்: “அந்த ராமன் லட்சுமன் போல இணை பிரியாமல் இருக்க வேண்டுமென்று அவர்கள் இருவரின் தாய் தன் உயிர் பிரியும் போது கூட இதை சொல்லி விட்டு தான் போனாள். அவன் மன குமுறல் இன்னும் தீரவில்லை எப்படி தீரும் அவன் வாழும் வரை அவன் நெஞ்சை அது அரித்துக் கொண்டேதான் இருக்கும். அதுவரை அவன் பிதற்றல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்” ஏன் என்று தெரிந்து கொள்ளப் படியுங்கள் கேயென்னரின் இந்தக் கதையினை.
  • மக்களால், மக்களுக்காக: “ஏழை மாணவர்களுக்கு மட்டுமே அரசுப் பள்ளி என்ற நிலையிருப்பதால் அவை பின்தங்கி இருகின்றன. வசதி மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் பிள்ளைகளும் அரசு பள்ளிக்கு வந்தால் அவை மேம்படும். அதனால் அரசுக் கருவூலத்திலிருந்து ஊதியம் பெறும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தனியார் பள்ளியில் சேர்த்தால் அங்கு செலுத்தும் கல்விக் கட்டணத்தை அரசுக்கு அபராதமாகச் செலுத்த வேண்டும்” என்ற அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவு குரல் கொடுக்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுடன் பாடிப் பழக சின்னச் சிறிய வண்ணக் கவிதைகளை வாரி வழங்கியுள்ளார் திரு. மணீமி. தமிழ் கற்கும் குழந்தைகளுக்கு கையில் கிடைத்த கற்கண்டு.
  • பச்சை நிறமே…: நாம் அறியாத அறிவைத் தருவது அறிவியல், அதனை அழகு தமிழில் அள்ளித் தருகையில் கற்கள் மட்டுமல்ல கற்பவரின் கண்களிலும் ஆர்வம் பூக்கும் – திருமதி. லோகமாதேவியின் புதிய தொடர்.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

09-30-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 09-30-2018 இதழில் …

  • தலையங்கம்: படிப்பவர்களை “ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்று எண்ண வைக்கும் வகையில் திரு. வீராவின் மிக அழகான “மின்சாரத்தின் கதை” மின்நூலாக வெளிவருகிறது என்ற அறிவிப்புடன் தொடங்கி அதனை எவ்வாறு வாங்குவது போன்ற விவரங்களும் சேர்த்துள்ளார் ஆசிரியர்.
  • அமைதி காப்போம்: ஆண்டில் ஒரு நாள் அமைதிக்காக ஒதுக்கினால் போதுமா? என்ற கேள்வியுடன் ஆரம்பித்து, உலகில் ஒவ்வொரு நாளும் அமைதி வேண்டுமென்றால், அதனை எவ்வாறு பெறுவது என்பதை கவிதையின் மூலமாக விளக்குகிறார் இராம்கி.
  • வாழும் கலை: இல்லற வாழ்வில் தம்பதியிடையே வரும் “சந்தேகம்” என்பது “நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்” என்ற உடுமலை நாராயண கவியின் வரிகளை அடிப்படையாக கொண்டு அழகான கதையின் வாயிலாக விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • பிள்ளையார்: ஒன்றிலிருந்து பத்து வரை எண்களை வரிசைப்படுத்தி முதல் கடவுள் விநாயகரைத் துதி பாடுகிறார், கேயென்னார். பிள்ளையார் சதுர்த்திக்கு படித்து வணங்கி மகிழ்வீராக.
  • அளசிங்கம்: விவேகானந்தரின் அமெரிக்கப் பயணமும், அவர் ஆற்றிய சொற்பொழிவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அவர் அமெரிக்கா வருவதற்கு வேண்டிய பண உதவியும், மற்ற எற்பாடுகளும் செய்தது யார் தெரியுமா? அறிந்து கொள்ளப் படியுங்கள் ஆசிரியர் இராமசேஷனின் கட்டுரையை.
  • ஈராக் போர்முனையில்: “இரண்டாம் நாள் இரவில், கூடாரத்தினுள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது, எங்களருகிலேயே குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டது. அனைவரும் ஓடி வெளியே வந்தோம். கான்கீரீட்டால் ஆன ஒரு அடி கனமுள்ள பங்கர் எனப்படும் சுவருக்குள் அனைவரும் சென்று பதுங்கி கொண்டோம். எங்களில் பலருக்கு அதுதான் முதல் முதலாக மிக அருகில் பெரும் சத்தத்துடன் பொழிந்த குண்டுமழை” என்று பாக்பா முகாமின் அனுபவங்களைத் தொடர்கிறார் ஆசிரியர் ஷாகுல்.
  • நம்பிக்கை: ஒரு மனிதன் எதை இழந்தாலும் பெற்று விடலாம் அவன் தன்னம்பிகையை இழக்காதவரையில் என்று ஒரு பழமொழி உண்டு. இக்கதையில் ஒருவர் இழந்த தன்னம்பிக்கையை எவ்வாறு திரும்பப் பெருகிறார் விளக்குகிறார் கதாசிரியர் கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: ஒருவர் கற்றது, பெற்றது, வென்றது எதுவும் காப்பாற்றாது அவர் ஒழுக்கம் தவறும் போது. “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்பட வேண்டும்” என்பதனை சமீபத்திய நிகழ்வுகளால் விளக்குகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

09-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 09-15-2018 இதழில் …

  • தலையங்கம்: பிள்ளையார் சதுர்த்திக்கு, சுற்றுப்புறச் சுழலுக்குத் தீங்கு வரா வண்ணம் விழாவைக் கொண்டாட வாழ்த்துகிறது ஆசிரியர் குழு.
  • எழுத்தறிவித்தவன்: ஆசிரியர் தினத்தன்று மிக எளிய கவிதை சொல்லி ஆரம்பப்பள்ளி ஆசிரியரை நினைவு கூர்கிறார் நமது இணையதளப் பள்ளி ஆசிரியை திருமதி. உமாராணி.
  • வாழும் கலை: “ஒளவையாரின் வரிகளுக்கு நடுவில் படித்தால், ஒரு சமுதாயத்தில் ‘நல்லவர்கள்’ சிறுபான்மையினர் என்று சொல்வதாகத் தோன்றுகிறது” என்று கூறும் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர், சிறுபான்மையினரால், பெரும்பான்மையினருக்கு பலன் வருகிறது என்பதையும் உரைத்தாரா? என்று படிக்கலாம்.
  • கிருஷ்ண ஜெயந்தி: வாயில் உலகம் காட்டி, வார்த்தையில் சாதுர்த்தியம் காட்டி, விரலால் மலையைத் தூக்கி, விழியால் மயக்கிய கண்ணனை வாழ்த்தும் கேயென்னாரின் கிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை.
  • இருபத்திநான்கு ஆசிரியர்கள்: “குரு தத்தாத்திரேயர்” தனக்கு அறிவினைப் புகட்டிய இருபத்திநான்கு இயற்கை ஆசான்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? அவர்களிடமிருந்து என்ன கற்றார்? என்பதை அழகாக விளக்குகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: நானும் நண்பனும் சிற்றுந்தினுள் ஏறும்போது, ஸாம் சிரித்துக்கொண்டே “பஸ்ஸுக்கு மேல குண்டு விழுந்தா என்ன செய்வது” எனக் கேட்டார். யாரிடமும் அதற்கு பதில் இல்லை. பாக்தாத் நகரில் செல்லும் போது சிற்றுந்தினுள் நண்பர்களுடன் நடந்த உரையாடலை நினைவு கூர்கிறார் ஷாகுல்.
  • மதம் கொண்ட மனம்: “உயிரோட இருக்கும்போது சாதி மதத்துக்காக சண்டை போடறவனெல்லாம், இப்போ ஒண்ணா சுடுகாட்டுக்கு போற பிணங்களைப் பாத்தாவது யோசிப்பாங்களா?” என்று மதம் கொண்ட மனத்தை வினவுகிறார் கதாசிரியர் கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: ஒரு தொழில் நிறுவனம் சமுதாயத்தின் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொள்வது, மிகவும் அரிது. தொழில் நிறுவனங்கள் எப்போதும் ஆளும் கட்சியையும், அதன் கொள்கைகளையும் பின்பற்றிச் செல்பவை. அவை எப்போதும் ஒரு பக்கமும் சேராமல் நடுவில் நிற்பவை. ஏனென்றால் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு தொழில் செய்வது கடினம் என்ற விதியிலிருந்து விலகி நின்ற தொழில் நிறுவனத்தைப் பாராட்டுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

08-31-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 08-31-2018 இதழில் …

  • தலையங்கம்: கடவுளின் தேசம் என்று பெருமை கொண்ட கேரளாவின் துயரம் தீர்க்க உதவுங்கள் என்ற வேண்டுதலுடன் உழைப்பாளர் தின வாழ்த்துக்களும் சொல்லுகிறது ஆனந்தசந்திரிகை ஆசிரியர் குழு.
  • உழைப்பாளர் தின வாழ்த்து: காணும் இடங்களில் எல்லாம் உன் கைவண்ணம் கண்டேன் என்று உழைக்கும் வர்க்கத்தை போற்றிப் பாராட்டிக் கவிதை சொல்லுகிறார் இராம்கி.
  • வாழும் கலை: பலருக்குத் தவறு செய்யும் போது தான் செய்வது தவறென்று தெரிவதில்லை. அப்படியிருக்கும் போது அதன் பாதிப்பு எப்படித் தெரியும்? எப்படியெல்லாம் ஒரு குற்றம் மற்றவரைப் பாதிக்கும் என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் வாழும் கலையில் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • அன்னை என்னும் இறைவி: அந்திவானத்தில் வரும் நட்சத்திரங்களை எண்ண முடியுமா? அன்னையின் அன்பை அளக்க முடியுமா? உருக்கமான கேள்வியுடன் கேயென்னாரின் கவிதை.
  • சேது நாட்டு வேந்தர்கள்: தமிழ் வளர்த்த பெரியோர்களைத் தமிழர்களுக்கு மறுஅறிமுகம் செய்து வரும் இராமசேஷன், இந்த வாரம் செய்யும் அறிமுகம் சேது நாட்டு வேந்தர்கள். நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கி தமிழ் வளர்த்த பெருமை இந்தப் பரம்பரையைச் சாரும் என்கிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: “மச்சான் பயப்படாதடா, இன்னும் கல்யாணம் ஆகல. நம்மள நம்பி யாரும் இல்ல. பொறுப்புக்களும் கிடையாது. அம்மா, அப்பாக்கு வேற புள்ளைங்க இருக்காங்க”  என்ற காரணத்துடன் ஈராக் போர்களத்தில் தன் நண்பர்களுடன் நுழைகிறார் ஷாகுல்.
  • தரைச்சீட்டு: ஓட்டு என்பது சக்தி வாய்ந்த ஜனநாயகத்தின் ஆயுதம் அதனை பலர் காலையில் எழுந்து பல் தேய்ப்பது போல், குளிப்பது போல், மற்ற அன்றாடக் கடமையைச் செய்வது போல் செய்கிறார்கள் என்று சிறு கதையின் மூலமாக விளக்குகிறார் ஆசிரியர் மணீமி.
  • மக்களால், மக்களுக்காக: ஒருமைப்பாடு துயரத்தில் ஒன்று கூடுவதல்ல, வளமையிலும் செழுமையிலும் மனத்தால் இணைந்து மனிதம் காப்பது என்பதை கேரளாவின் நிகழ்வைக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.