06-30-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம்.

ஆனந்தசந்திரிகை 06-30-2018 இதழில் …

  • தலையங்கம்: அமெரிக்க சுதந்திர தினத்தின் வாழ்த்துக்களோடு ஆனந்தசந்திரிகை இதழும், இலவச இணையதளத் தமிழ்ப் பள்ளியும் சேர்ந்து நடத்திய தமிழ் திறனாய்வு தேர்வின் முடிவுகள் எப்போது வருகிறது என்று தெரிவிக்கிறார் ஆசிரியர்.
  • பால் நினைந்தூட்டும்: ஒரு சேயின் ஜனனம், தாயின் மறு ஜனனம் என்று தன் தாயின் அன்பினை நினைவில் கொண்டு வருகிறார் கவிதையாக, நமது புதுக் கவிஞர் ஜானகி நம்பி நாராயணன்.
  • வாழும் கலை: இடையில் வந்த சாதி என்னும் பூதம் சென்றொழிந்தால்தான் தமிழ்ச் சமுதாயம் உய்யும் எனச் சாடுகிறார் தமது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர். உலகமே ஏற்றுக் கொண்ட மாஸ்லோவின் தேவை-படியமைப்பு-கோட்பாட்டயும் தகர்த்துவிடுகிறது இந்த சாதி என்னும் பூதம். சாதி ஒழியுமா என்பதைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
  • ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்: சத்தமின்றிச் சலனமின்றி மயாமியின் தெருக்களில் உங்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லுகிறார் ஆசிரியர் வ. செளந்தரராஜன்.
  • மக்களால், மக்களுக்காக: மனித வாழ்க்கையே ஒரு போராட்டமென்ற நிலையில், தெருவில் இறங்கிப் போராடுவது ஜனநாயக நாட்டிற்கு தேவையா என்று அலசுகிறார் இராம்கி இராமகிருஷ்ணன். ஏன் புரட்சிகளும், போராட்டங்களும் தோன்றுகின்றன என்பதையும் ஆராய்கிறார்.
  • நொடியில் மரணம்: ஆங்கில படத்தின் வேகமும், தென்னிந்திய திரையின் திடீர் திருப்பங்களையும் சேர்த்து ஒரு “ஆக்சன்” கதையினை அழகாகச் சொல்லுகிறார், கேயென்னார்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

 

06-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம்.

ஆனந்தசந்திரிகை 06-15-2018 இதழில் …

 

தலையங்கம்: வடகொரியாவின் அணு ஆயுதத்தைவிட மக்களை அதிகம் அச்சுறுத்துவது எது என்பதை விளக்குகிறார் ஆசிரியர்.

இயற்கையே கடவுள்: பஞ்சபூதங்களால் நிரம்பிய உலகை, மதமும், மதம் சார்ந்த நம்பிக்கைகளும் சூழ்ந்து வருகிறது. அவைகளால் உருவாக்கப்பட்ட “மாயமான்” தோற்றத்தைப் புரிந்து கொண்டு, நாம் போற்றவேண்டியதும், துதிக்க வேண்டியதும் இயற்கையே என்பதைக் கவிதை பாடி விளக்குகிறார் ஸ்ரீ ஸ்ரீதர்.

தந்தையர் தின வாழ்த்துகள்: தந்தையின் கண்களின் நீரில் அன்பு வெளிப்படும், ஆனால் அதற்கு அளவுகோல் இல்லை என கவிதைபாடி, தந்தையின் உயர்ந்த உள்ளத்தை வாழ்த்துகிறார் கேயென்னார்.

விரல்விடு தூது: முனைவர் திரு. ஞானசம்பந்தன் அவர்களின் கலகல கட்டுரை. கற்காலம் முதல், இக்காலம் வரை, அன்னம், கிளி, புறா, தோழி என காதலர்களுக்குத் தூதாகப் பல சென்றிருந்தாலும், இக்காலத்தில் விரல்விடு தூதே சிறந்ததென்று சொடக்குப் போட்டுச் சொல்லுகிறார் ஆசிரியர்.

வாழும் கலை: ஒருவர் சொல்வது மற்றவருக்கு அப்படியே புரிந்து விட்டால் உலகின் பல உறவு சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். ஒருவர் சொல்லாமலேயே மற்றவருக்குப் புரியுமானால் உறவுகள் பலப்படும் என்கிறார் ஸ்ரீ ஸ்ரீதர்.  

மக்களால், மக்களுக்காக: இந்தியாவை ஆட்கொண்டுள்ள பிரச்சனைகளை மூன்று வார்த்தைகளில் சொல்லிவிடலாம் என்கிறார் இராம்கி இராமகிருஷ்ணன். அதன் தீர்வுகள் எப்படி என்பதையும் ஆராய்கிறார்.

ஆசையே அலைபோல: மனிதன் ஆசைகளுக்கு அடிமை, ஆசைகளோ அலைபோல வந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கை என்பது அந்த அலையில் பயணம் செய்வதா, அல்லது விலகி நின்று வேடிக்கை பார்ப்பதா என்பதை கதையின் மூலம் விளக்குகிறார் கேயென்னார்.

தமிழ்ப் பேரவை-அழைப்பிதழ்: ஜுன்30, 31, ஜுலை 1-ம் தேதிகளில் டல்லஸில் நடக்கும் தமிழ்ப் பேரவைக்கான அழைப்பிதழும் விழா விவரங்களும்.

குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு

பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

05-31-2018 ஆனந்தசந்திரிகை

ஆனந்தசந்திரிகை 05-31-2018 இதழில் …

  • தலையங்கம்: “மெமோரியல் டே” வாழ்த்துக்கள் கூறலாமா? கூடாதா? விளக்குகிறார் ஆனந்தசந்திரிகை ஆசிரியர்.
  • அஹிம்சைக் கொலை: அண்ணல் பிறந்த நாட்டிலே அஹிம்சையைக் கொல்லுகிறார்கள் என்று தூத்துக்குடி சம்பவத்தை நினைத்து கவிதையில் மனம் பதைக்கிறார் இராம்கி.
  • வாழும் கலை: இகிகாய் என்றால் தெரியுமா? பள்ளியை முடித்துவிட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பது மாணவப் பருவத்தின் குழப்பம். அவர்களுக்கு எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் ஸ்ரீ ஸ்ரீதரன்.
  • நான் இங்கே இருக்கிறேன்: தவறு சிறியதாக இருந்தாலும், அதன் விளைவு விபரீதமாக அமையலாம் என்பதை நெஞ்சைப் பிழியும் விதத்தில் கதையாகச் சொல்லுகிறார் முரளி.
  • ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்: சியேட்டல் நகரில் வாழும் மக்களைப் பத்து விதமாகப் பிரிக்கலாம் என்கிறார் கட்டுரை ஆசிரியர் வ. செளந்தரராஜன். நீங்கள் எந்த ரகம் என்றும் யோசிக்கலாம்.
  • வெற்றியின் விலை? விலை கொடுத்து வாங்குவதில்லை வெற்றி. ஆனால், வெற்றி அதன் விலையை எடுத்துக் கொள்ளும் என்கிறார் கதாசிரியர் வீரா (சென்ற இதழின் தொடர்ச்சி).
  • மக்களால், மக்களுக்காக: சமுதாய அக்கறையுடன், சட்ட, சமூக, தொழில்நுட்ப, அரசியல் மாற்றங்கள் தேவை என்பதை வலியுறுத்தும் தொடர் கட்டுரையைத் தொடங்கி, மாறாதது தேறாது என்கிறார் இராம்கி.
  • கண் திறக்க வேண்டும்: வளர வேண்டியது குழந்தைகள் அல்ல, பெற்றோர்கள் தான் என்று ஒரு காதல் கதையின் மூலம் விளக்குகிறார் கேயென்னார்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க, கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு
  • பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

ஆனந்தசந்திரிகை 05-31-2018 இதழ் வெளியாகிவிட்டது. நீங்கள் படித்து விட்டீர்களா?

 

05-15-2018 ஆனந்தசந்திரிகை

ஆனந்தசந்திரிகை 05-15-2018 இதழில் …

  • தலையங்கம்: தமிழன்னைக்கு, தமிழன் கொடுக்கும் “விலையில்லா” தமிழ்ப் பரிசு எது என்று விளக்குகிறார் ஆனந்தசந்திரிகை ஆசிரியர்.
  • பயனுள்ள பனைமரம்: பனைமரம் இத்தனைப் பயன்களைத் தருகிறதா? – வியக்க வைக்கும் கவிதை.
  • அன்னையரை நினைத்திடுவோம்: அரசன் முதல் ஆண்டிவரை, ஏன் ஆண்டவன் வரை என்று கூடச் சொல்லலாம், இவர் அனைவருக்கும் பொது அன்னையின் அன்பு. அவரை நினைத்திடுவோம் என்று கவிதை பாடி அழைக்கிறார் கேயென்னார்.
  • வாழும் கலை: இரத்தலும், ஈதலும் இன்பம் அளிப்பவையா? முடிந்தால் கொடுங்கள். முடியலையா? அப்போ கேட்காமலாவது இருங்கள். கேட்கவேண்டிய பரிதாபமான நிலையா? அப்போ யார் முகம் சிணுங்காம அன்போட கொடுக்கறாங்களோ, அவங்க கிட்டபோய்க் கேளுங்கள். ஸ்ரீ ஸ்ரீதரனின் கொடுக்கல் வாங்கல் பற்றிய இலக்கிய அலசல்.
  • கல்சுபாய்: ஆழ்மனத்தின் ஆதிக்கம் ஆளை இப்படி ஆட்டிப் படைக்குமா கதையால் விளக்குகிறார் கேயென்னார்.
  • எழில்மிகு இலங்கை: இலங்கைக்கு இன்பச்சுற்றுலா சென்று வந்த இராமசேஷன் தன் அனுபவங்களைப் பகிர்கிறார்.
  • ஸ்டீவன் ஹாக்கிங்: ஏன் என்ற கேள்வி மட்டும் என்றைக்குமே மிஞ்சும் என்பதை ஆமோதிக்கும் சக்கர நாற்காலியிலிருந்து சாதனை புரிந்த ஸ்டீவன் ஹாக்கிங்-ன் வாழ்க்கைப் பற்றிய ஸ்ரீ ஸ்ரீதரன் எழுதிய கட்டுரை.
  • வெற்றியின் விலை? விலை கொடுத்து வாங்குவதில்லை வெற்றி. ஆனால், வெற்றி அதன் விலையை எடுத்துக் கொள்ளும் என்கிறார் கதாசிரியர் வீரா.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு
  • பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

04-30-2018-ஆனந்தசந்திரிகை

ஆனந்தசந்திரிகை 04-30-2018 இதழில் ….

  • பட்டணத்தில் பூதமாய் வந்தது யார்? அவர் தந்தது என்ன? – ஸ்ரீ ஸ்ரீதரன் கவிதையாய் சொல்லுகிறார்.
  • வச்சிட்டான்யா ஆப்பூ: யார் யாருக்கு வைத்தார்கள் ஆப்பூ – கொங்குதமிழில் இராம்கி இராமகிருஷ்ணனின் கட்டுரை.
  • வாழும் கலை: தமிழ் கலாச்சாரத்தில் ஆணுக்குப் பெண் நிகரா? – ஸ்ரீ ஸ்ரீதரனின் வாக்குவாதம் …
  • கல்சுபாய்: கல்சுபாய் சிகரத்தில் சந்திரகாந்துக்கு நிகழ்ந்தது என்ன? – கேயென்னாரின் கதை
  • ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்: லாஸ் வேகாஸில் நடப்பது அங்கேயே இருக்கட்டும் என்பார்கள். செளந்தரராஜன் பயணக் கட்டுரையில் அந்த ரகசியத்தைக் காப்பாற்றினாரா?
  • தர்மம் தழைக்க உதவும் மகாபாரதம்
  • தங்கத்தைப் புறம் தள்ளியது எது? நாடு எங்கே போகிறது? என்று ஆதங்கப்படும் வீராவின் கட்டுரை …
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

 

ஆனந்தசந்திரிகை 04-15-2018

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். 

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆனந்தசந்திரிகை 04-15-2018 இதழ் ஆண்டுமலராக வெளியாகியுள்ளது.

100+ பக்கங்கள்.

1000 பிரதிகள் புத்தகமாக அச்சில் வெளியாகியுள்ளது.

மின்னிதழாகவும் வெளியாகியுள்ளது.

தமிழ் இலக்கிய பிரபலங்கள் பலர் பங்களித்துள்ளார்கள்.

தமிழ் படிக்கும் அன்பர்களுக்கு மிக அருமையான புத்தாண்டு பரிசு. அது மட்டுமல்ல Android கைபேசி உபயோகிப்பவர்களுக்காக ஆனந்தசந்திரிகையின் செயலியும் வெளியிட்டுள்ளோம்.  Google Play Store-ல் இருந்து தளவிறக்கம் செய்யலாம். Iphone உபயோகிப்பவர்கள் இன்னும் சிலநாட்களில் செயலியை Apple Store-ல் இருந்து தளவிறக்கம் செய்யலாம். தமிழ் படிக்கும் அன்பர்கள் இப்போது செயலியில் படிக்கலாம்.

தமிழ்க் குடும்பங்கள் படித்து பகிர்ந்து மகிழவும். வியாபார நிறுவனங்கள் உங்கள் நிறுவனங்களுக்கு வரும் தமிழ்க் குடும்பங்களுக்கு விநியோகித்து மகிழவும்.

மின்னிதழை, தளவிறக்கம் செய்து படிக்க https://drive.google.com/open?id=0B-2zfBawRs7Ta3BLeWl5VVdycnc இணைப்பில் சொடுக்கவும்.

இப்பத்திரிகையின் முந்தைய மின்னிதழ்களைப் படிக்க https://drive.google.com/open?id=0B-2zfBawRs7TYy1ydjd3OVBXX2s சொடுக்கவும்.

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றி.

இராம்கி இராமகிருஷ்ணன்.

03-31-2018 – ஆனந்தசந்திரிகை

03-31-2018 – ஆனந்தசந்திரிகை  இதழ் வெளியாகிவிட்டது. படித்துவிட்டீர்களா?

இவ்விதழை தளவிரக்கம் செய்து படிக்க ஆனந்தசந்திரிகை இணைப்பில் சொடுக்கவும்.

இப்பத்திரிகையின் முந்தைய இதழ்களைப் படிக்க மின்னூலகத்தில் சொடுக்கவும்.

எங்களது ஆண்டுமலரைப் படிக்க ஆனந்தசந்திரிகை-ஆண்டு மலர்-2017-ல் சொடுக்கவும்.

03-15-2018 – ஆனந்தசந்திரிகை 

03-15-2018 – ஆனந்தசந்திரிகை  இதழ் வெளியாகிவிட்டது. படித்துவிட்டீர்களா?

இவ்விதழை தளவிரக்கம் செய்து படிக்க ஆனந்தசந்திரிகை இணைப்பில் சொடுக்கவும்.

இப்பத்திரிகையின் முந்தைய இதழ்களைப் படிக்க மின்னூலகத்தில் சொடுக்கவும்.

எங்களது ஆண்டுமலரைப் படிக்க ஆனந்தசந்திரிகை-ஆண்டு மலர்-2017-ல் சொடுக்கவும்.

02-28-2018 – ஆனந்தசந்திரிகை

02-28-2018 – ஆனந்தசந்திரிகை  இதழ் வெளியாகிவிட்டது. படித்துவிட்டீர்களா?

இவ்விதழை தளவிரக்கம் செய்து படிக்க ஆனந்தசந்திரிகை இணைப்பில் சொடுக்கவும்.

இப்பத்திரிகையின் முந்தைய இதழ்களைப் படிக்க மின்னூலகத்தில் சொடுக்கவும்.

எங்களது ஆண்டுமலரைப் படிக்க ஆனந்தசந்திரிகை-ஆண்டு மலர்-2017-ல் சொடுக்கவும்.